ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 3

இதுவரை 6 வள்ளவிளை விசைப்படகுகள் கடலில் மூழ்கியதாக சொல்லப்படுகிறாது. இதில் 90 ஆட்கள் வேலைக்குச் சென்றிருந்தார்கள். எத்தனைபேர் நீந்தி தீவுகளில் கரையேறினார்கள் என்பதோ, எத்தனைபேர் காப்பாற்றப்பட்டார்கள் என்பதோ இன்னும் தெரியவில்லை. அனைத்து ஊர்களில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் 200 முதல் 500 வரை இருக்கலாம். அரசுகள் சொல்லும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்ளக்கூடாது. உண்மையான உயிரிழப்புகளை அறியவேண்டுமென்றால் ஒன்று மீனவர்கள் சொல்வதை கேட்கவேண்டும். அவர்களிடம் இறந்தவர்கள் குறித்த அனைத்து தகவலும் இருக்கிறது. இன்னொன்று,நேர்மையான...Read more

ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 2

டிசம்பர் ஒன்றாம் நாள் அமெரிக்காவின் நாசா ஒகி புயல் குறித்த சில தகவல்களை வெளியிட்டது. தற்போது நம்முடைய மீனவர்கள் பாதிப்பிற்குள்ளான புயல் பகுதியை அமெரிக்காவின் அகுவா மற்றும் சுவோமி செயற்கைக்கோள்கள் கடந்துசென்றபோது மேகமூட்டத்தின் குளர் அளவு -63 டிகிரி பாரன்ஹீட் (-53 டிகிரி செல்சியஸ்). இந்த மேகங்கள் மழையாக கடலில் விழும்போது, குறைந்தபட்சம் குளிர் அளவு உறைநிலைக்கும் குறிவாகவே இருக்கும். இதை மீனவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். இதன் காரணமாக படகுகள் சேதமாகி,...Read more

ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர்

2004-ம் வருடம் ஏற்பட்ட சுனாமியைப் போன்ற மோசமான சேதத்தை ஒக்ஹி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டதில் இதுவரை 25பேர் இறந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. உயிர்ச்சேதம் எத்தனை என்று தெளிவாகத்தெரிய பல நாட்கள் ஆகும். ஆழ்கடலில் புயலினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தூத்தூர் பகுதி சார்ந்த சுமார் 250 படகுகளின் துல்லியமான ஜிபிஎஸ் புள்ளிகள் அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2500ற்கும் அதிகமான மீனவர்கள் இருப்பார்கள். இதைவைத்து எளிதாகவே அவர்களை காப்பாற்ற...Read more

துறைவன் – சில சில்லறைகள்

[சமீபத்தில் துறைவன் குறித்து நண்பர்களால் எழுப்பப்பட்ட சில விமர்சங்களுக்கான பதில்கள் இவை.] கேள்வி: துறைவன் நாவல் பொய்ப்பிரச்சாரம் செய்வதாகச் சொல்கிறார்களே?  பதில்: துறைவன் ஒரு நாவல். அதிலிருக்கும் வரலாற்று தகவல்கள் நாவல் கதாபாத்திரங்களின் விவாதப்பொருளாகவே இருக்கிறது. ஒரு கட்டுரையைப்போல் வெளிப்படையான தெளிவான தரவுகளை ஒரு நாவலில் எதிர்பார்க்க முடியாது. ஒரு நாவலில் வாசக இடைவெளி வேண்டுமென்பதால், துறைவனில் சில தகவல்கள் வெளிப்படையாக இல்லாமலிருக்கும். முக்குவர்கள் என்னும் “இனக்குழுவின் பெயர்” போர்ச்சுக்கீசியர்களின்...Read more

முக்காரு யுத்த கதா

-1- இலங்கையின் சிங்கள அரசர் ஆறாம் பராக்கிரமபாகு, காஞ்சிபுரம், கீழக்கரை மற்றும்  காவேரிப்பட்டினம் கரையர் படைகளின் உதவியுடன் புத்தளத்தில் முகாமிட்டிருந்த  முக்காரு படையை தோற்கடித்ததை விவரிக்கும் முக்காரு யுத்த கதா என்னும் ஓலைச்சுவடி பிரிட்டானிய அருங்காட்சியகத்தில் (எண். Or. 6606) பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டெடுத்தவர் ஹூ நெவில் என்னும் பிரிட்டானியர். இலங்கையின் வரலாற்றையும், இனங்களையும் விரிவாக ஆய்வுசெய்து பதிவுசெய்தவர் இவர். பின்வருவது ஹூ நெவில் அவர்களின் முக்காரு யுத்த கதா...Read more

படகோட்டிகள்

எதிர் வெளியீடாக வந்திருக்கும் இனயம் துறைமுகம் புத்தகத்தின் படகோட்டிகள் கட்டுரையின் ஒருபகுதி. புத்தம் வாங்க: http://www.ethirveliyedu.in/shop/இனயம்-துறைமுகம்/ -1- 15ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக வெளிநாடுகளை கைப்பற்றுவதில்  போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் தீவிரம் காட்டின. அப்போது இந்த இரண்டு நாடுகள் மட்டுமே கடலில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. 1498-ம் வருடம் போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோ ட காமா கடல்வழிப்பயணமாக இந்தியாவின் கோழிக்கோட்டில் கால்பதித்தார். 1588ம் வருடம் இங்கிலாந்து ஸ்பெயின் கடற்படையை தோற்கடித்த...Read more

துறைவன் – மார்ஷல் சில்வா

சின்னத்துறை திரு. மார்ஷர் A. சில்வா (2016 வருட இந்திய குடியுரிமை பணிகளுக்கான தேர்வு, தரவரிசை 820) துறைவன் குறித்து எழுதியது. Marshall [31-05-2016@20.46.08(IST)] Congratulations Sir for the prestigious award and also for your immense contribution to pen down a historic account of our land and its people. Thuraivan is a novel which I consider as a...Read more

இனயம் துறைமுகம் – ஒரு தகவல்பிழை

இனயம் துறைமுகம்  புத்தகத்திலிருக்கும் ஒரு தகவல்பிழையை நண்பர் N.D. தினகர் சுட்டிக்காட்டியுள்ளார். “உங்களது இனயம் துறைமுகம் புத்தகத்தை பார்த்தேன். பக்கம் 125 ல் தவறான தகவல் இருந்ததாலயே இந்த பதிவு. திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1948 ல் நடைபெற்ற தேர்தலில் மட்டுமே மீனவருக்கு தனித் தொகுதி தரப்பட்டிருந்தது. அகஸ்தீஸ்வரம் ( கத்தோலிக்கர்) என்பதே அந்த தொகுதியின் பெயர். இதில் பரதவர் சாதியைச் சேர்ந்த அம்புரோஸ் வெற்றிபெற்றார். 1949 ல் திரு-கொச்சி மாநிலம்...Read more

கடலில் கரையும் குமரி கடற்கரை

[குறும்பனை சி. பெர்லினின் ‘கடலில் கரையும் குமரி கடற்கரை’ என்னும் கட்டுரை புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை] தமிழகத்தின் தென்மேற்கு கடற்கரையில் கடலரிப்பிற்கு இரையாகாத கிராமங்கள் இருப்பது அபூர்வம். ஒவ்வொரு வருடமும், ஆனி ஆடி காலகட்டத்தில், கடல்சீற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடல் நீரோட்டத்தின் வீரியம் எந்தவித ஆய்வு வரைமுறைகளுக்கும் உட்படுத்த முடியாமலிருக்கிறது. தமிழக எல்லையோரத்திலிருக்கும் கேரளாவின் விழிஞ்சம் பன்னாட்டுத் துறைமுக கட்டுமானத்திற்கு கடலுக்குள் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அலைதடுப்புச்சுவர் கட்டும்வேலைகள் துரிதமாக...Read more

சேலுகேடு

[குறும்பனை சி. பெர்லின் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் சேலுகேடு குறுநாவலுக்கு என்னுடைய அணிந்துரை] ஒரு சமூகத்தின் சாதனை என்பது, அது தன்னிடமிருந்து எத்தனை எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்தது. எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை, இலக்கியவாதிகளை உருவாக்காத எந்த சமூகத்திற்கும் எதிர்காலமில்லை. எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் குரல். அந்த சமூகத்தின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக முன்வைப்பவர்கள். சமூகத்தின் ஒட்டுமொத்த வலியையும் தன்னுள் உணர்ந்து எழுத்தாக்குபவர்கள். எழுத்தாளனின் மனம், தான்சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த...Read more