நெய்தல் கலைச்சொற்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. துறைவன் (கிறிஸ்) மட்டுமல்லாது கொற்கை (ஜோ டி’குரூஸ்), ஆழிசூழ் உலகு(ஜோ டி’குரூஸ்), கண்ணீர் சமுத்திரம் (குறும்பனை சி பெர்லின்), நீந்திக்களித்த கடல்(குறும்பனை சி பெர்லின்), கடல் தண்ணி கரிக்குது(குறும்பனை சி பெர்லின்), கடல் நீர் நடுவே (கடிகை அருள்ராஜ்) ஆகிய நெய்தல் ஆக்கங்களிலுள்ள கலைச்சொற்களும் ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளது. நெய்தல் படைப்புகளில் ஏதேனும் வார்த்தைகள் புரியாமலிருந்தால் தெரியப்படுத்தவும். அந்த வார்த்தைகளின் அர்த்தங்களும் இங்கே தரப்படும்.

 

எண் கலைச்சொல் பொருள்
1 அங்கரளியாய் அங்கே இங்கே கேட்டு வந்தது
2 அச்சாறு ஊறுகாய்
3 அசனம், அயனம் அன்னதானம்
4 அசை துணி காயப்போடும் கயிறு
5 அஞ்சனப்பெட்டி ஐந்து அறைகள் கொண்ட பனையோலைப்பெட்டி
6 அஞ்ஞானி வேற்றுமதக்கடவுள்
7 அடக்கம் இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு
8 அடஞ்ச கரை சேர்ந்த
9 அடியம்பு பெரியமீனை அடிக்க பயன்படும் தடி
10 அடுக்களை சமயலறை
11 அண்ணாக்கு மேல்தாடையின் உள்பகுதி
12 அண்ணைக்கு அன்றைக்கு
13 அணியத்து சென்னி தோணி, கட்டுமரம், வள்ளத்தின் முன்புற பக்கவாட்டில்
14 அணியம் படகின் முன்பகுதி
15 அத்தாளப்பட்டினி இரவுப்பட்டினி
16 அத்துவானக்காடு அடர்ந்த காடு
17 அத்ற அத்தனை
18 அப்புறாணி ஒன்றுமறியாதவன் / அப்பாவி
19 அப்றாணி அப்பாவி
20 அயறுதம் இளைப்பாறுகிறேன்
21 அர்ச்சீஸ்டவர்கள் புனிதர்கள்
22 அரச்சால் முத்து, சிப்பி குளிப்பவர்கள் இடுப்பில் கட்டிப்போகும் சங்குப்பை
23 அரடு சத்தமாக அழுவது
24 அரநீவாடு கரையிலிருந்து ஆழ்கடல் நோக்கி பாயும் நீரோட்டம்
25 அரயாணம் அரைஞாணக்கயிறு
26 அரவம் சத்தம்
27 அரி அரிசி
28 அரும விலை அதிகம்
29 அருவாத்தி கடலில் சிப்பி எடுக்க பயன்படுத்தும் கத்தி
30 அருவில் பக்கத்தில்
31 அலந்து ஆசைப்பட்டு
32 அலப்பற வீண்பேச்சு
33 அலப்புதீர ஆசைதீர
34 அலவா கன்னம்
35 அலவாக்கர அலைவாய்க்கரை
36 அலுப்பு களைப்பு
37 அவசான கட்டம் கடைசி நேரம்
38 அவசானம் கடைசியில் / முடிவில்
39 அவத்த அகத்தில் / உள்ளே
40 அவதாள நேரம் கடைசி நேரம்
41 அவஸ்தை மரணத்தருவாயில் தரப்படும் தேவதிரவிய அனுமானம்
42 அவுத்தியால் தோணியின் அணியத்தின் மேல்பகுதியில் இருபுறமும்

கயிறுகளை இழுத்துக்கட்டவுள்ள அமைப்பு

43 அவுத்து போட்டிண்டு நிர்வாணமாக
44 அழி அழிமுகப்பாதை
45 அளவம் கிண்டல்
46 அளிச்சாட்டியம் அக்கரையின்மை, அடங்கமறுப்பது, அழிவு ஆட்டம்
47 அளியன் மைத்துனன். நண்பர்களையும் அளியன் என்று அழைப்பதுண்டு
48 அறுதலி விதவை
49 அறுப்பாளி கெட்டவார்த்தை அதிகம் பேசுபவர்
50 அறுப்பு கெட்ட வார்த்தை
51 அறுப்பு கண்டம் கெட்டவார்த்தை
52 அன்னடிச்ச விசாரிக்க
53 அன்னந்தண்ணி உணவும் தண்ணீரும்
54 அன்னளிச்சு விசாரித்து
55 அனக்கம் அசைவு
56 அனங்கு அசைவு
57 அனுக்கிரகம் ஆசீர்வாதம்
58 ஆக்கல் நக்கல்
59 ஆக்கு படகு, தோணியின் அடிப்பகுதியில் பிடித்திருக்கும் சிப்பிகள்
60 ஆக்குதல் கிண்டல் செய்வது
61 ஆசிரியம் விருத்தப்பாடல்
62 ஆஞ்சான் பாய்மரத்தின் பருவானை ஏற்றப் பயன்படும் கயிறு
63 ஆணம் குழம்பு
64 ஆத்துமம் இறந்தவர்களின் ஆன்மா
65 ஆத்துவாய் பொழிமுகம்
66 ஆத்யம் முதலில்
67 ஆராளி தேவையில்லாத சத்தம்
68 ஆலாத்து கயிறு
69 ஆழி கடலலை பொங்குமிடம்
70 இங்ஙன இந்தப்பக்கம்
71 இடியற இடிகரை
72 இடுக்கு சந்து
73 இடுமி இடுமின், போடுங்கள்
74 இருளம் இருண்ட கார்மேகம்
75 ஈக்கி ஈர்க்கில்
76 ஈச்சல் சாய்வு நாற்காலி
77 ஈச்சி
78 ஈச்சியடிப்பது முடிச்சுப்போடுவது
79 ஈடு அடமானம்
80 ஈருவலி பேன்கொல்லி
81 ஈருள்ளி வெங்காயம்
82 உக்ரன் நல்ல
83 உச்சை மதியம்
84 உடுப்பு துணி
85 உண்ட உண்டையா அறுப்பு நாகூசும் விதமாக கெட்டவார்த்தை
86 உண்ணாக்கு உள் நாக்கு
87 உண்ணைக்கு இன்னும் உள்ளுக்குள்
88 உணக்கு உலர்த்து
89 உத்துப்பார் கவனமாகப்பார்
90 உத்துருபோல கொஞ்சம்
91 உரிஞ்சுபோட்டு நிர்வாணமாக
92 உருக்களிச்சோம் உருவில்லாமல் செய்தோம்
93 உருப்படி தங்க நகைகள்
94 உருப்படி நகை
95 உளுக்குத்து கையை முறுக்கி ஓங்கிக்குத்துவது
96 உளுச்சுவான் அழைப்பான்
97 ஊச்சாளி தைரியசாலி / சண்டியர்
98 ஊத்த அழுக்கு
99 ஊத்தி ஊற்றி
100 ஊரடி ஊர் கோஷ்டிச் சண்டை / இரண்டு ஊர்களுக்கு இடையில்

நடக்கும் சண்டை

101 ஊரான் ஊர்க்காரன்
102 எச்சி எச்சில்
103 எடக்குமடக்கு குதர்க்கம்
104 எத்தர எத்தனை
105 எத்தியாச்சு சேர்ந்துவிட்டது / வந்துவிட்டது
106 எப்பளப்பு இழுப்பு, சயரோகம்
107 எர இரைமீன்
108 எரிச்சண்டாம் எரிக்கவேண்டாம்
109 எரிவு வயிற்றெரிச்சல்
110 எல்லு எலும்பு
111 எளக்கு இறக்கு
112 எளக்கு எழுப்பு
113 எளம்தாரி இளைஞன்
114 ஏக்க ஏற்க
115 ஏத்தனம் மரம், வலை மற்றும் கடலுக்குப்போக தேவைப்படும்

சாமான்கள்

116 ஏரா படகின் அடிக்கட்டை
117 ஏல் கரையிலிருந்து கடலில் திரியும் மரங்களைப்பார்த்து

யோசனை சொல்வது

118 ஏவ ஒரு மீன்வகை. பொங்குமீன்
119 ஒச்சியம் தற்பெருமை
120 ஒசுவனம் மீன்பாடு
121 ஒஞ்சரிவு ஒரு பக்கச்சாய்வு
122 ஒடக்கு கோட்டுமாலை கட்டுமரத்துடன் கட்டும் கயிறு
123 ஒடப்பெறப்பு உடன்பிறப்பு
124 ஒடமஸ்தன் உடமைக்கு சொந்தக்காரன்
125 ஒணந்த உலர்ந்த
126 ஒணரு நினைவு
127 ஒணருவந்து நினைவுதிரும்பி
128 ஒத்தாசை உதவி
129 ஒபத்திரவம் தொல்லை
130 ஒமல் கட்டுமரத்தில் மீன் வைக்கப்பயன்படுத்தும் பனையோலையால்

செய்யப்பட்ட கூடை

131 ஒர்லோஸ் கடிகாரம்
132 ஒரவி பெரியமீன்
133 ஒளிவாக ஓரமாக / ரகசியமாக
134 ஒறத்த வீரமுள்ள
135 ஒறப்பா வேகமாக / வலிமையாக
136 ஒறப்பாட்டு வலிமையாக
137 ஒறவாக்கு சமாதானப்படுத்து
138 ஓங்கில் டால்பின்
139 ஓட்டு ஒருமுறை ஆழ்கடல் சென்று மீன்பிடித்துவிட்டு திரும்பி

கரையில் வரும் கால அளவு

140 ஓடாவி கட்டுமரம் செதுக்குபவர்
141 ஓம் உணமை, சத்தியம், ஒத்துக்கொள்கின்றேன், ஆமோதிக்கின்றேன்
142 ஓர்ம ஞாபகம்
143 ஓர்மை ஞாபகம்
144 ஓறுமையா கவனமாக
145 ஓஸ்தி அப்பம்
146 கக்கம் அக்குள்
147 கச்சாப்புடை கோவணம்
148 கச்சாவலை நெத்திலிமீன் பிடிக்கப் பயன்படும் வலை
149 கச்சான் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று
150 கச்சோடம் வியாபாரம்
151 கசம் 100 மார் அளவு ஆழத்திற்கும் அதிகமான கடல்பகுதி (ஒரு

மார் அளவு என்பது மார்பு விரிந்து அகல நீட்டிய இரண்டு

கைகளின் நடுவிரல் நுனிகளுக்கு இடைப்பட்ட தூரம்)

152 கடல் மாம்பட்டு கடல் கலங்கி
153 கடவம் பனையோலையால் வெய்த பெரிய பெட்டி
154 கண்ணாத்துமுக்கு இடப்பெயர். கண்ணனாக முக்கு என்பதன் மருவு
155 கண்போச்சல் கண்பார்வை
156 கணியம் மீன்பிடிக்கும் இடத்தை குறிக்கும் (நட்சத்திர) அடையாளம்.
157 கப்பித்தான் விசைப்படகு கேப்டன்
158 கப்பு அளவுக்கதிகமாக வாரிவாரி உண்ணுதல்
159 கப்புண்டு வாயில் கவ்விக்கொண்டு
160 கம்பா தேங்காய் நாரால் திரித்து உருவாக்கப்பட்ட வடம்
161 கம்பா வடம் / கயிறு
162 கம்பாகட்டுவது சம்பந்தமில்லாத பிரச்சனையில் இன்னொருவர் தலையிடுவது
163 கம்பாவம் கயிறு, வடம்
164 கம்மரர் மீன்பிடித்தல், சங்கு, முத்துக்குளிப்பவர்கள், தோணியின்

மாலுமிகள்

165 கயித்து மரம் சிறிய கட்டுமரம்
166 கரச்ச அழுகை
167 கரஞ்சிண்டு அழுதுகொண்டு
168 கரஞ்சு அழுது
169 கரஞ்சுகுமுறி தொண்டை கிழிய அழுது புலம்பி
170 கரயப்பாத்து கரையை நோக்கி
171 கருத்தை மாட்டுவண்டி
172 கரைக்கணைச்ச நீவாடு ஆழ்கடலிலிருந்து கரை நோக்கிப் பாயும் நீரோட்டம்
173 கரைக்காற்று கடலிலிருந்து நிலம் நோக்கி வீசும் காற்று
174 கல்பன கட்டளை
175 கலிப்பு இனப்பெருக்கம்
176 கலுசம் கால்சட்டை
177 கவுட்டை இரண்டு காலுக்கும் இடையில்
178 கவுரு இரவில் கடலில் தெரியும் வெளிச்சம்
179 கவுரு வெளிச்சம் நட்சத்திர ஒளி ஈர மணலில் எதிலொரிக்கும் வெளிச்சம்
180 கள்ளம் பொய்
181 கள்ளலைட்டு டார்ச்லைட்
182 களறு நிறம்
183 களியல் விளையாட்டு
184 கறி காச்சி மீன்குழம்பு செய்து
185 கனம் எடை
186 கனுவு மீன்குஞ்சு
187 காட்டுமனியன் காட்டுவாசி
188 காண் கழிவுநீர் வெளியேறும் பகுதி
189 காணா சுக்கானை திருப்ப உதவும் கம்பு
190 காய்மகாரம் பொறாமை
191 காரியஸ்தன் ஊர்தலைவர்களில் ஒருவர்
192 காலத்த காலை நேரம்
193 காலம்பற காலை நேரம்
194 காவி மரத்தாலான மிதவை
195 காவுதல் தோளில் தூக்கிச்செல்வது
196 கிண்ணி வெத்தலை இடிக்கும் பொருள்
197 கிலேசம் பைத்தியம், பயம்
198 கீச்சானி கீழ்ஜாதி
199 கீலம் மீனை நீளவாக்கில் கத்தியால் வெட்டி துண்டுபோடுவது
200 கீழாகரயட்டு வடகிழக்கு (கடலிருக்குமிடம் தெற்கு, கரை வடக்கு)
201 கீழாட்டு கிழக்கு நோக்கி
202 கீளாட்டு கிழக்கு நோக்கி
203 குசினி சமய்லறை, சமயல்காரன்
204 குடியுமி குடியுமின் / குடியுங்கள்
205 குண்டணி கோள்மூட்டுவது
206 குண்டாமண்டி குழப்பக்காரன்
207 குத்துப்பிடி போட்டாபோட்டி
208 கும்பாரி நண்பர்
209 கும்பி வயிறு
210 குமிஞ்சான் சாம்பிராணி
211 குருநிலை குருவை மதிக்கும் தன்மை
212 குளுத்தி குளிர்
213 குறியாமுண்டு கோவணம்
214 கூக்கவலி இழுப்பு, சயரோகம்
215 கூக்கவிளி கூச்சல் சப்தம்
216 கூட்டுக்காறி தோழி
217 கூட்டுகெட்டு நண்பர்கள்
218 கூதற கீழ்மகள்
219 கூர்ப்பா கூர்மையாக
220 கெட்டுவ மடிக்கு (மீன்பிடிக்க) கொடுக்கப்படும் கடன்
221 கெடப்பு இருப்பு
222 கெடயில எழும்பமுடியாமல் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடப்பது
223 கெலிப்பது ஒருபக்கமாகச் சரிவது
224 கேந்தி கோபம்
225 கேள்வு தோணியில் சரக்கு கொண்டுசெல்வதற்கான கட்டணம்
226 கைநீட்டம் முதல் விற்பனை காசு
227 கைப்பிடித்தம் போட்டு எஞ்சின் இல்லாமல் கையினால் வலை இழுக்கும் படகு
228 கையூக்கு கைபலம்
229 கையேக்க பொறுப்பேற்க
230 கொசவன் குயவன்
231 கொசாலா தாராளமாக
232 கொடுக்கு வலை கடைசி வலை
233 கொமரி இளம்பெண்
234 கொமுரு திருமணமாகாத இளம்பெண்
235 கொருவுவது மாட்டுவது, இணைப்பது
236 கொல்லம் வருடம்
237 கொல்லாமரம் முந்திரி மரம்
238 கொல்லாவு கொல்லாம் பழ மரம்
239 கொழியம்பு கொழுகொம்பு
240 கொள்ளாம் நன்று, நல்லது
241 கொளுத்தோட்டி பெரியமீனை கொளுவி எடுக்க பயன்படும் நுனியில் பெரிய

தூண்டில் மாட்டப்பட்ட தடி

242 கொறச்சு கொஞ்சம்
243 கொறிக்கு போஜன பிரியத்தால் கண்ணேறு
244 கோக்கி சமயல்காரன்
245 கோட்டியா எந்திர பாய்மரக்கப்பல்
246 கோடா பாய் பருமலையும் கட்டுமரத்திலுள்ள வாரிக்கலையும்

இணைக்கும் கயிறு

247 கோதாளை தோணியினுள் நடுப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான

அமைப்பு

248 கோமப்பிள்ளை வாலிபபெண்
249 கோமுட்டி பருவானின் மற்றொரு பகுதி
250 கோள்வாரம் தகராறு
251 கோஸ்மரம் தோணியின் பிச்சல் பாய்மரம்
252 சக்கரம் பணம்
253 சக்ரீஸ்து கோவிலில் பீடத்தின் பின்பகுதி
254 சகாயம் மலிவு
255 சகிச்சு சகித்து
256 சங்காத்தம் நட்பு / தொடர்பு
257 சங்கூற்றம் அபாரமான தைரியம்
258 சங்கெல்லாம கணக்கில்லாமல்
259 சட்டணும் திடீரென்று
260 சட்டம்பி சண்டியர்
261 சதிச்சு களஞ்சான் சதிசெய்துவிட்டான்
262 சந்தம் அழகு
263 சப்பும் சவறும் குப்பையும் கூளமும்
264 சம்சியம் சந்தேகம்
265 சம்புதல் நோய்வாய்ப்படுதல்
266 சம்மாட்டி முதலாளி
267 சர்க்கார் அரசாங்கம்
268 சர்த்தல் வாந்தி
269 சரிக்கி சுக்கான் வட்டு
270 சவட்டுவது உதைப்பது
271 சவுச்சு மென்று
272 சள்ளையடிப்பது சோர்ந்துவிழுவது
273 சாத்யத சாத்யக்கூறு
274 சாப்பாக்கிற்று கடத்திற்று
275 சாயுந்தேரம் சாயங்காலம் / சூரியன் மறையும் நேரம்
276 சாரமில்லை பரவாயில்லை
277 சாரி சேலை
278 சாளவலை சாளைமீன்பிடிக்கப் பயன்படும் வலை
279 சிக்கார முழுவது
280 சித்து ஏத்தினம் பலவகை சிறிய மீன்பிடிக்கும் உபகரணங்கள்
281 சில்லம் அலையடி
282 சில்லியெடுப்பது கட்டுமரம், படகு அலையுடன் இணைந்து வேகத்துடன்

ஓடுவது

283 சிறாவு சுறாமீன்
284 சிறீதனம் வரதட்சணை
285 சிறுக்கி செறுக்கனின் எதிர்பதம். ஆனால் இது கெட்டவார்த்தையாக

பயன்படுத்தப்படுகின்றது

286 சீக்கு நோய்
287 சீணம் களைப்பு
288 சீல உடை
289 சீவாரிசை சிபாரிசு
290 சுக்கானி தோணி ஓட்டு
291 சுடுதான் அடுப்பு
292 சுடுதான் பையன் தோணிச் சமயலறையில் எடுபிடி வேலை செய்பவன்
293 சுண்டீ சற்று பெரிய உதடுள்ளவள்
294 சுண்டு உதடு
295 சுரப்பு கடலில் மிதமான் பொங்குதல்
296 சூத்த சொத்தை
297 செக்கல் மாலையில் செல்லும் மடி
298 செணம் சீக்கிரம் / இந்த க்‌ஷெணம் / இந்த நிமிடம்
299 செணமணும் சீக்கிரமாக (இந்த க்‌ஷெணம், இந்த நிமிடம்)
300 செணமாட்டு சீக்கிரமாக (இந்த க்‌ஷெணம், இந்த நிமிடம்)
301 செத்த தென்னையோலையால் செய்த மறைவுப்பகுதி
302 செத்தை கதவு தென்னை ஓலையால் செய்யப்பட்ட கதவு (இரண்டு

செத்தைகளை கூடாரம்போல் இணைத்தும் பன்னாவை

உண்டாக்கலாம்)

303 செம்புத்துட்டு செம்புக்காசு
304 செம்மறிப் புருவை இளம் செம்மறியாடு
305 செமடு சுமடு / சுமை
306 செருமாறல் அடைப்பு
307 செவிட்டை கன்னத்தை
308 செறுக்கன் இளைஞன், மகன்.
309 செறுப்பக்காரன் இளைஞன்
310 செறுப்பு தடுப்பு
311 சென்னி கன்னம்
312 செனத்த வார்த்த கோபமான வார்த்தை
313 சேந்தால தனியாக
314 சேந்து இணைந்து
315 சேப்பு பாக்கெட்
316 சேலாக கவனமாக
317 சேலாட்டு ஒழுங்காக
318 சேலாளி ஞாயம் பேசுபவர்
319 சேலு யோசனை சொல்வது
320 சேலுகேடு கடல்சீற்றம்
321 சேவரம் / சேகரம் ஒரு குடும்ப வழித்தோன்றல்கள் அனைவரும்
322 சொப்பர் இடைக்கட்டு
323 சொறி ஜெல்லிமீன்
324 சோத்துக்கை வலதுகை
325 சோநீவாடு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் நீரோட்டம்
326 சோவாருதல் சோர்ந்திருத்தல்
327 சோழ வெலங்க தென்மேற்கு
328 சோழக்குளு நச்சுக்குளிர்
329 டவுசர் பாய் பிரதான பாய்களின் மேல் உள்ள சிறிய பாய்
330 டாவா இடதுபக்கம்
331 தண்டல் தோணித்தலைவன்
332 தண்டுக்குமுண்டு குதற்கமாக பேசுவது
333 தந்தேடம் தைரியம் / திமிர்
334 தப்பமார் தகப்பன்மார், பெரியவர்கள்
335 தரிச்சாம தாங்காமல்
336 தலக்காணி தலையணை
337 தலக்கை ஒருமுனை
338 தலகுத்தற தலைகீழாக
339 தவ்வு முட்ட பாய்மரத்தின் இறுதிவரை
340 தவளாடச்சில்லி பாய்பருமலின் மேல் முனைப்பகுதி
341 தவுள் ஆட்டுத்தீவனத்தழை
342 தள்ள தாய்
343 தன்மரம் வடமரம் பாய்மரங்கள்
344 தனராக தனதாக, சுயமாக
345 தாக்கம் கெட்டு உடல் தளர்ந்து
346 தாச்சி தலைவன்
347 தாந்து அமிழ்ந்து, மூழ்கி
348 தாமான் பாயிலிருந்து வரும் கயிறு
349 தால்பரியம் விருப்பம்
350 தாவு கடலின் அடிமட்ட அளவு / ஆழம்
351 தாவுகடல் ஆழக்கடல்
352 தானக்கேடு கெட்டவார்த்தை
353 திக்காரம் திமிர்
354 திற்று காசு
355 தீத்தி சாப்பாடு
356 தீனக்காறன் நோய்வாய்ப்பட்டவன்
357 தீனக்காறன் நோயாளி
358 துட்டி மரண செய்தி
359 துட்டு காசு
360 துப்புளி எச்சில்
361 துருசம் வேகம்
362 துவர்த்து தோள்துண்டு
363 துளவை துடுப்பு
364 தூச்சமா தெளிவாக
365 தூண்ட தூண்டில்
366 தூப்பம் பேச்சு
367 தூரு வலை விளிம்பு வலை
368 தெக்காட்டு தெற்கு நோக்கி
369 தெகையேல போதுமானதாக இல்லை
370 தெம்பாக பலமாக
371 தெவுங்கி தளர்ந்து தள்ளாடி
372 தெற்றிப்போவும் தவறான வழியில் செல்லும்
373 தெறிப்பு கோவில் வரி
374 தேகம் உடம்பு
375 தேச்சியம் கோபம்
376 தேரம் நேரம்
377 தைசா பருவானின் ஒரு பகுதி
378 தொடுத்து தொடர்ச்சியாக
379 தொடுப்பது துடுப்புவலிப்பது
380 தொரம் கட்டுமரத்தின் பக்கவாட்டில் இருக்கும் மரத்தடி
381 தொழுசாப்பயல் வாலிபன்
382 தொள்ளாளி மந்திரவாதி
383 தொளந்து மூங்கிலை பிளந்து செய்த துளவையால் கட்டுமரத்தை

செலுத்தி

384 தொளிச்சு தெளித்து
385 தொறயக்காரன் கடற்கரை கிராமத்தவர்
386 தோண்டிக்கயிறு கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும் கயிறு
387 நக்களிப்பு நக்கல்
388 நங்கர்துங்கர் சுக்குநூறாக, சின்னாபின்னமாக
389 நடயில திண்ணையில் / சீக்கிரம் நட
390 நயிக்கிட்டாம்பூச்சி மின்மினிப்பூச்சி
391 நரங்கி நரங்கி தரையில் மெதுவாக ஊர்ந்து
392 நன்மை நற்கருணை
393 நஸ்டீடு நஷ்டஈடு
394 நாணயம் நேர்மை / நுட்பம்
395 நாத்தி நுகர்ந்து
396 நாயம் நியாயம்
397 நாலுகாதின வெத்திலை நான்குமுறை மெல்லும் வெற்றிலை
398 நாவிய ஒமலு நாவிதர்களின் பங்கு மீனை போட்டுவைக்க கடலில்

கட்டுமரத்தில் கொண்டுசெல்லும் சிறிய ஒமல்

399 நிக்கும் நிற்கும்
400 நிங்களுக்கு உங்களுக்கு
401 நிசாரமா, நிசாரமாட்டு எளிதாக
402 நிரப்பு அலையில்லாத கடல்
403 நீக்கம்பு தீனம் வாந்தி பேதி நோய்
404 நீவாடு நீரோட்டம்
405 நீவாடு உண்ணைக்கு கடல் நீரோட்டம் ஆழ்கடல் நோக்கி இழுப்பது
406 நீவாடு, சோணுவாடு கடல் நீரோட்டங்கள்
407 நெஞ்சொறப்பு அசாத்திய தைரியம்
408 நேக்கு நூதனம்
409 நேட்டம் லாபம், வருமானம்
410 நேரியல் அங்கவஸ்திரம்
411 நேருதானா, நேர்தானா உண்மைதானா
412 நோஞ்சி ஒல்லிப்பிச்சான்
413 பஞ்சார சர்க்கரை
414 பஞ்சுப்பாய் புதுப்பாய்
415 பட்ட நீ வாடு குறுமி (low tide) நீரோட்டம்
416 படப்பு அடர்த்தியான கிளைகள் கொண்ட மரத்தடி, புதர்
417 படுவாட்டு கட்டுமரத்தில் இரவுமுழுவதும் கடலில் தங்கி மீன்பிடிப்பது
418 பண் பாய் பக்கவாட்டுப் பாய்
419 பண்டார பெரிய
420 பண்டாரி விசைப்படகில் சமயல் மற்றும் எடுபிடி வேலை செய்பவன்
421 பண்டாலை பண்டகசாலை
422 பண்டியாலை பண்டகசாலை
423 பண்டுவம் பணிவிடை
424 பண்ணி டால்பின், ஓங்கில்
425 பணக்கெட்டு நிச்சயதார்த்தம், வரதட்சணை பணத்தை மணமகன் வீட்டில்

கொடுக்கும் சடங்கு

426 பணிய கீழ / சரிவில்
427 பத்றம் பத்திரிகை
428 பப்பக்கா பப்பாளிப்பழம்
429 பர்னாந்துமார் பரதவ கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்
430 பரட்ட பரத்தை
431 பரட்டத்தலை எண்ணை தேய்க்காத தலை
432 பரதாவம் பரிதாபம் / பரபரப்பான ஆற்றாமை
433 பரபரா வேகவேகமாக
434 பராதி புகார்
435 பரானத்துல பதட்டத்தில்
436 பருமல் பாய் கட்டப்பயன்படும் உயரமான கம்பு
437 பருவான் பாயோடு இணைந்த நீளமான கம்பு
438 பலவா பலகை
439 பவுறு தற்பெருமை
440 பவுறும் பெருப்பமும் தற்பெருமை
441 பறஞ்சாலும் பேஞ்சாலும் – ஏசினாலும் பேசினாலும்
442 பறயும் திட்டும்
443 பன்னா வள்ளம், வலை, கட்டுமரம் ஆகியவற்றை கடற்கரையில்

மூடிவைக்க தென்னை ஓலை வேய்ந்த மூங்கிலால்

செய்யப்பட்ட கூடாரம்

444 பனங்கலயம் உண்டியல்
445 பஸ்தல் ஒரு உணவு வகை
446 பாங்குழந்தை சின்னக் குழந்தை
447 பாஞ்சு நீந்தி
448 பாட்டை போத்தல்
449 பாய்மரம் தோணியின் ஏராக்கட்டையிலிருந்து செங்குத்தாக

நிற்கும் மரம்.

450 பாராத்தியம் வைத்தியம்
451 பாரு ஆழ்கடைலில் மீன் அதிகமாக இருக்கும் பாறைப்பகுதி
452 பிச்சல் தோணியின் பின்பகுதி
453 பிசினாறி கஞ்சன்
454 பிடிகிட்டிச்சி பிடிகிடைத்தது
455 பிடிச்சிண்டு பிடித்துக்கொண்டு
456 பித்தெட்டுலேயே உடனேயே
457 பிந்தி தாமதமாக
458 பிருது பிக்களை தலைமுறை தலைமுறையாக
459 பிறதி குற்றவாளி
460 பீத்த பெருமை தற்பெருமை
461 பீயாத்தி கூர்முனையுள்ள கத்தி
462 புரியம்புடேல பிடிபடவில்லை
463 புல்லாமஞ்சி ஆடுமாடு சாப்பிடுவதற்கான புல்
464 புறுத்துசக்க அன்னாசிப்பழம்
465 பூச்ச பூனை
466 பூதார் சரக்கு அறையின் தளப்பகுதி
467 பெகளம் சண்டை சச்சரவு
468 பெகளம் சத்தம், சண்டை
469 பெஞ்சா பெய்தால்
470 பெஞ்சாதி மனைவி
471 பெட்டணும் உடனே
472 பெட்டெந்நு சீக்கிரம்
473 பெட்டெந்நு உடனே
474 பெடச்சிண்டு பதட்டத்தோடு / நடுநடுக்கத்தோடு / ஆவேசத்தோடு
475 பெருவாதியாக அதிகமாக
476 பெரேடம் நிலம்
477 பெல்லப்பெல்ல மெதுவாக
478 பெறத்த பின்பக்கமாக
479 பெறவுமரம் பின்னால் செல்லும் கட்டுமரம்
480 பே வெள்ளி இரவு நேரங்களில் பிரமையாக தோன்றும் வெளிச்சம்

– மூடநம்பிக்கை

481 பேக் கப்பல் இரவு நேரங்களில் தோணியின் ஓட்டத்தை பயமுறுத்தும்

கப்பல் – மூடநம்பிக்கை

482 பேசன் பெரிய வட்டவடிவ பாத்திரம்
483 பேஞ்சிண்டு திட்டிக்கொண்டு
484 பேடி பயம்
485 பேடிச்சாத பயப்படாதே
486 பேடிச்சு பயந்து
487 பேடிச்சுபோய் பயந்துபோய்
488 பேயுதது ஏசுவது
489 பேர்சியா வெளிநாடு
490 பொக்கம் உயரம்
491 பொக்காரமா பரபரப்பாக
492 பொசல் புயல்
493 பொட்டு பொடி சின்னச் சின்ன
494 பொய்ப்போடுதை பக்கவாட்டுப் பலகை அமைப்பு
495 பொளி பொழிமுகம்
496 பொளுது சூரியன்
497 பொறுதி பொறுமை
498 போச்சலாக மங்கலாக
499 போடுமி போடுமின் / போடுங்கள்
500 போணி டப்பா
501 மக்கிடி பொய்ப்போடுதையில் கயிறு செல்லும் பகுதி, கதவை பூட்ட

பயன்படும் மரத்துண்டு அல்லது இரும்பு கம்பி

502 மக்கித்தாடி பிரஞ்சுத்தாடி
503 மச்சுவா சிறிய படகு, தோணியின் உயிர்காக்கும் படகு
504 மட்டு வரிசையாக தூண்டில் கட்டிய கயிறு
505 மடக்கு பிச்சாத்தி மடக்கி விரிக்கும் கத்தி
506 மடக்குப்பெட்டி சிறிய மடித்துவைக்கும் பனையோலையால் செய்த பெட்டி.
507 மடிச்சுதாவு விருப்பமில்லாமல்
508 மண்டூக்கு முக்கால் இஞ்ச் தடிமனும் ஏழு அடி நீளமும் கொண்ட

நாக்கில்லா தூண்டில் கம்பி

509 மத்யஸ்தம் தலைமை
510 மதி போதும்
511 மர்க்கம் சோகம்
512 மரம் தரிச்சாம கட்டுமரம் மூழ்கும் அளவிற்கு
513 மரம்பிடிக்காரர்கள் அலை அதிகமாக இருக்கும் காலத்தில் கட்டுமரத்தை

அலைகடந்து கொண்டுசெல்ல உதவுபவர்கள்

514 மளபெஞ்சா மழைபெய்தால்
515 மளயக்கண்டு மழை காரணமாக
516 மறுக்கு பருவானிலிருந்து வரும் கயிறு
517 மனசிருப்பு நினைப்பு
518 மனசிலாவுது புரிகின்றது
519 மனியன் மனிதன்
520 மஸ்திரம் போட்டி
521 மாச்சப்பட்டு வெட்கப்பட்டு
522 மாச்சலாக வேண்டாவெறுப்பாக
523 மாயிரியா அலை
524 மார் ஒரு மார் அளவு என்பது மார்பு விரிந்து அகல நீட்டிய இரண்டு

கைகளின் நடுவிரல் நுனிகளுக்கு இடைப்பட்ட தூரம்

525 மீங்கட மீன்கடை
526 மீம்படுக்க மீன்பிடிக்க
527 முச்ச மணம்
528 முச்சூடும் முழுவதும்
529 முட்டங்கால் காலை மடக்கி முட்டிபோட்டு இருப்பது
530 முடிறாந்த தலைமுடியை இழுத்து சண்டைபோட
531 முந்தல் கடலில் இயற்கையான பாதுகாப்பு அரண்
532 முப்பாடு முதல்பாடு
533 மும்பன் முதல்வன்
534 முறி அறை
535 முன்னுமரம் முன்னால் செல்லும் கட்டுமரம்
536 மூப்புலு முதியவர்
537 மூரா கயிறு
538 மெச்ச பளக்கம் தற்பெருமை
539 மெனக்கெட்டான் வேலைவெட்டியில்லாதவன்
540 மெனக்கெடு ஓய்வுநாள்
541 மெனக்கேடர் மீனவர்களில் படித்து வேலையிலிருப்பவர்கள்,

திடீர் பணக்காரர்கள்

542 மெஜிரா திசைகாட்டும் கருவி
543 மேச்சோறு வேலைக்குப்போகாமல் வீட்டிலிருந்து சாப்பிடுபவர்
544 மேசைக்காரர் மீனவ வியாபாரிகள், பெரும் செல்வந்தர்கள்
545 மேஞ்சுவெச்சிருந்த மூடிவைத்திருந்த
546 மேடை ஊர் பங்குத்தந்தை இல்லை
547 மேத்தன் மேற்கிலிருந்து (அரபு நாடுகளிலிருந்து) வந்தவர்கள்.

மேற்கு கடற்கரை முஸ்லிம்களை குறிக்கும் சொல்

548 மேலா உள்ள மேற்கு ஆழ்கடலில்
549 மேலா வெலங்க ஆழ்கடல் மேற்கு (தென் மேற்கு, கடலிருக்குமிடம் தெற்கு)
550 மேலாட்டு மேற்கு நோக்கி
551 மேவாம கேட்காமல்
552 மைய்யம் இறந்த உடல்
553 மையாக்குளி கல்லறைத்தோட்டம்
554 மொக லெச்சணம் முகத்தோற்றம்
555 மொதப்பை மிதவை
556 மோட்டிச்சலாம் திருடலாம்
557 மோடு முகடு
558 மோள் மகள்
559 யாத்தினம் மீன்பிடி தொழில் கருவிகள்
560 ராக்க சங்கு அளக்கும் மரச்சட்டம்
561 ராங்கிக்காரி அகம்பாவம் பிடித்தவள்
562 ராச்சியம் உலகம் / தூரதேசம் / கண்காணும் எல்லைவரை
563 ரெங்கு தோணியின் மேல்தளத்தில் பாய்மரக்கயிறுகளை

இழுத்துக்கட்டுவதற்கான ஒரு அமைப்பு

564 ரெங்குபெட்டி பயணப்பெட்டி
565 ரோதனை சோதனை
566 லஸ்கர் மாலுமி
567 லெம்பாக இலகுவாக
568 லேக்கி கயிறு
569 லேசுபட்ட கொஞ்ச நஞ்ச
570 லேசுபட்ட சாதாரணமான
571 வங்கிர்மை நீண்ட நாள் பொறாமை
572 வங்கு கால்கள் தோணியின் குறுக்குச் சட்டங்கள்
573 வசமாட்டு ஒழுங்காக
574 வசமில்லாம அபாயகரமாக
575 வசி சாப்பாடு தட்டு
576 வடக்காட்டு வடக்கு நோக்கி
577 வண்ணமான ஆளு குண்டான ஆள்
578 வம்புச்ச மிகப்பெரிய
579 வர்த்தமானம் பேச்சு
580 வரியம் வருடம்
581 வருளம் இருண்ட கார்மேகம்
582 வலுவு நீரோட்டம்
583 வழக்கு சண்டை
584 வளக்காளிகள் சண்டைபோட்டவர்கள்
585 வளமைதானே வளக்கம்தானே
586 வளவு வளைவு
587 வளியாட்டு வழியாக
588 வளிவலை சிறு விசைப்படகில் மீன்பிடிக்கப் பயன்படும் வலை
589 வஸ்து நிலம்
590 வாட மணம்
591 வாணாலும் ஜீவனும் வாழ்நாளும் உயிரும்
592 வாரியல் துடைப்பம்
593 வாருவை சாபம்
594 விளி கூப்பிடு
595 விளிச்சது அழைத்தது
596 விளிச்சிண்டு அழைத்துக்கொண்டு
597 விளிச்சு அழைத்து
598 விளிச்சேலையா அழைக்கவில்லையா
599 வீச்சம் நாற்றம்
600 வீதியான் அதிக அகலமுள்ள
601 வீலஸ் கேப்டன் விசைப்படகை இயக்கும் அறை
602 வெக்கி வெட்கி, நாணி
603 வெக்கிச்சு வெட்கி நாணமாக
604 வெசர்க்கிது வியற்கின்றது
605 வெட்டுக்கு வெலங்க அலைகளைத்தாண்டி
606 வெப்புறாளம் ஆவேசம் / ஆத்திரம் / கோபம்
607 வெரசலாக வேகமாக
608 வெரவி பிசைந்து
609 வெலக்கப்படாது தடுக்கக்கூடாது
610 வெலங்க தொலைதூரக்கடலில்
611 வெள்ளனே முன்கூட்டியே
612 வெள்ளாப்பின காலையில்
613 வெறச்சு நடுங்கி
614 வேம்பா அடிபம்பு
615 வேளம் பேச்சு
616 வேளா கருவாப்பு வேளாமீன் கூட்டம்
617 வையிட்டு சாயங்காலம்
618 ளாங்கு விலாங்கு, அஞ்சாளை
619 றோசம் ரோஷம்
620 ஜவ்னா வலதுபக்கம்
621 ஜெட்டிசன் சரக்கை கடலுக்குள் தள்ளுவது
622 ஸ்ராங்கு விசைப்படகு கேப்டன்
623 ஸ்றெமிச்சேன் முயன்றேன்