துறைவன்: முக்குவர் வாழ்வும் வரலாறும்

[நண்பர் வேணு தயாநிதி சொல்வனம் இலக்கிய இதழில் எழுதிய கட்டுரை.] //அலை தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. அலைகள் என்பவை கறுத்த யானைகள். கடலுக்குள் நடக்கும் யானைச்சண்டையில் வென்ற யானைகள் தோல்வியுற்ற யானைகளைக் கடற்கரை நோக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது. யானைகளின் குருதி வெள்ளை நிற நுரையாகக் கடற்கரையெங்கும் பரவிக்கிடக்கிறது.// //அலை விழும் இடத்திலிருந்து கடல் விளிம்பு வரையுள்ள கடல்நீர் பேரருவி விழுந்து உருவாகும் வெண்பரப்பு சிறுமியின் கருநீல பட்டுப்பாவாடையின் வெள்ளை...Read more

துறைவன் – என்னுரை

இந்தியாவின் வரலாறு அதன் இனக்குழுக்களின் வரலாறுகள் இல்லாமல் முழுமையடையாது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் முக்குவர்கள் என்பவர்கள் மிகப்பெரிய இனம். இவர்களின் வரலாறாக தற்போது கிடைப்பவை அனைத்தும் போர்சுகீசியர்களின் வருகைக்குப்பிந்திய இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கின்றது. பதினாறாம் நூற்றாட்டுக்கு முந்தைய முக்குவா இனமக்களின் வரலாறு தெளிவாக இன்னும் ஆராயப்படாமலிருக்கின்றது. “வரலாறென்பது உண்மைக்கும் தொன்மத்திற்கும் பிறந்த புதல்வி” என்று நிகாஸ் கசந்த்சாகீஸ் சொல்வார். ஆனால் நமக்கு இப்போது  கிடைக்கும் வரலாறுகளும், அதுபோல் இன்று எழுதப்படும் வரலாறுகளும் இன மேட்டிமையுடன் ஒரு பக்க...Read more

இனயம் துறைமுகம் – 1

சில அரசியல் தலைவர்கள் கட்சி, ஜாதி, மதம் கடந்து அனைவருக்கும் பொதுவானவராக, எளிய மக்களில் ஒருவராக இருப்பார்கள். கன்னியாகுமரியைப் பொறுத்தவரை அவ்வாறு பல நேர்மையான அரசியல் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள். தற்போது கம்மூனிஸ்டு கட்சியில் திருமதி லீமாரோஸ், பிஜேபியில் பொன்னர் என்னும் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள். இதில் பலருக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கடற்கரை மக்கள் ஏதேனும் உதவிக்கு சென்றாலும் அவரால் முடிந்ததை அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செய்திருக்கின்றார். ஆனாலும் சிலநேரம்...Read more

இனயம் துறைமுகம் – 2

இந்தியாவின் மேற்கு கடற்கரையின் ஆழம் அதன் கடல்வெட்டிலிருந்தே துவங்குகின்றது. அதுபோல் பொழிமுகங்களும் அரபிக்கடல் கடற்கரைகளில் அதிகம். இவையே இந்த பகுதிகளில் இயற்கை துறைமுகங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணிகள். இதற்கு விதிவிலக்கு விழிஞ்சம் மற்றும் குளச்சல் துறைமுகங்கள். கடலரிப்பு காரணமாக கடலினுள் சென்ற பாறைகள் இயற்கையான தடுப்பரண்கள்போல் கடற்கரைகளை பாதுகாக்கின்றது. இந்த பாறைகளும், கடல் ஆழமும் விழிஞ்சம் மற்றும் குளச்சலில் இயற்கை துறைமுக உருவாகத்தில் முக்கிய பங்குவகிக்கின்றன. கரைகளில் மட்டுமல்ல கடலிலும்...Read more

திலேப்பியா

இடைப்பாடு கிராமத்தில் கடற்காற்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசிக்கொண்டிருந்தது. கடலிருக்குமிடம் தெற்கு! சூரியன் உச்சியில் நிலைத்து மெதுவான அதிர்வுகளோடு தெற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கடலில்குளித்து கரையேறிய சிறுவர்கள் சுடுமணலில் உட்கார்ந்து தொடையிடுக்கில் சுடுமணலை வாரிவாரி வைத்து புதைந்தார்கள். கட்டுமரங்கள் மெதுவாக ஆழ்கடலிலிருந்து கரைநோக்கி உடைந்து சிதறிய கண்ணாடிச் சில்லுகளின்மேல் சேதாரமின்றி வழுவி வந்துகொண்டிருந்தது. சில வள்ளங்களை தலை நிமிர்ந்து மீனவர்கள் கடலில் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஒருசிறுவன் மயக்கம் தெளிந்து, “லேய், ராயூ வருதாம் பாரு”, என்று...Read more

எரியும் பனிக்கட்டி

[மீத்தேன் பிரச்சனை துவங்குவதற்கு முன்பு 2012 எழுதிய ஒரு எளிய கட்டுரை] ஒருபக்கம் இலங்கை கடற்படை, மறுபக்கம் அணுவுலை அது போக ஆழ்கடல் மீன்பிடிப்பு உரிமையை பன்னாட்டு மீன்பிடி கம்பனிகளுக்கும் தாரை வார்த்து இந்திய மீனவனில் சங்கை நெரித்து குப்புறத் தள்ளியாகி விட்டது. இன்னும் என்ன என்று யோசித்த போது இது சிக்கியது. எரியும் பனிக்கட்டி! புவியின் வெப்பத்தை சமன் செய்வதில் புவி வளிமண்டலத்திலிருக்கும் பசுமைக்குடில் வாயுக்களான மீத்தேன், கார்பன்-டை-ஆக்ஸைட்...Read more

துறைவன் – புத்தகம் என் பார்வையில்

[மரிய ஜாண், பூத்துறை எழுதியது.] நூலின் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆண்டனிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். படிக்கும்போத 20/25 வருடங்களுக்கு முன்பு அழைத்து செல்கிறது.    இரையுமன்துறை  முதல் நீரோடி வரை உள்ள 8 கிராமங்களும் தங்களது தனிதன்மை கொண்ட மொழியால் வேறுபட்டு உள்ளன. இதுபோல் வேறு எங்குமே காண முடியாது என எண்ணுகிறேன். நமது வட்டார மொழியை மிக அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். நமது அடுத்த தலைமுறை இந்த வட்டார மொழிகளை இது...Read more

இலங்கிறும் பரப்பின் எறி சுறா நீக்கி…

[துறைவன் நாவல் முன்னுரை: ஜோ டி குருஸ்] மகிழ்வதற்கான தருணமிது. தென்மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், நெய்தலே அதன் வீரத்தை, விவேகத்தை, வாழ்க்கைக்கான போராட்டத்தை, கடலாடும் வித்தையை அகவிழி திறந்து பேச ஆரம்பித்திருக்கிறது. வரலற்றுக் காலந் தொட்டு இன்று வரையிலான வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை துறைவன் என்ற பதிவின் மூலம் ஒருசேர அள்ள முயன்ற தம்பி கிறிஸ்டோபர் ஆன்றனியின் முயற்சியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் படிக்க: http://padhaakai.com/2016/01/10/துறைவன்-நாவல்-முன்னுரை-ஜ/Read more

ஒரு ரசனை…

[துறைவனுக்கு மதிப்பிற்குரிய பாதர் பங்கி எழுதிய அணிந்துரை] ‘நீரின்றி அமையாது உலகம்’ என்பதுபோல் உணவின்றி அமையாது உயிர். உணவுக்கு உழவு எவ்வளவு அவசியம் என்பதையுணர்ந்த வள்ளுவர் கூற்றை பாருங்கள்: ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் – மற்றெல்லாம்/ தொழுதுண்டு பின் செல்வர்.’ ஒருவேளை உழவுக்கு முன்னரே மனிதன் கரையில் மிருகங்களை வேட்டையாடியும், நீர்நிலைகளில் மீன்களைப் பிடித்தும், பழங்களை பறித்தும், கிழங்குகளை தோண்டியெடுத்தும் உணவு தேடியிருக்கவேண்டும். உணவில் புரதச்சத்தின் தேவையை மீன்போல் மற்றெதுவும்...Read more

துறைவன் – சாகர் இரயும்மன்துறை

குமரி மாவட்டத்தில் கேரள எல்லையோரம் உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சார்ந்தவர் கிரிஸ்டோபர் ஆன்டணி ! இவர் தான் அனுபவித்த கடற்கரை கிராமத்து வாழ்க்கையையும் , கடற்கரையில் சொல்லி கேட்ட கதைகளையும் ஒன்றிணைத்து ‘துறைவன் ‘ எனும் நாவலை படைத்துள்ளார். இதுவரை வந்த கடலோர நாவல்களில் ஐயத்திர்க்கிடமின்றி ஆழிசூழ் உலகுதான் சிறந்தது . துறைமுகம் ஒரு பெரும்படைப்பே . அவ்விரு ஆக்கங்களுக்கும் அனைத்து வகையிலும் நிகராக நிற்கும் படைப்பு இது...Read more