கண்டாலறியும்புள்ளி

“சித்தியே, இந்த உச்ச வெயிலிலி எங்கு போறீ? ரேசங்கடயிலயா?” வீட்டுத்திண்ணையில் எட்டிப்பார்த்து எலிசபெத் கேட்டார். “ஆ, உனக்க துண்டு இருக்கேது?” கிளாரா கண்களை கூர்ந்து பார்த்து கேட்டார். இடைப்பாடு கிராமத்தில் எப்போதும் வெயில் சற்று அதிகம்தான். அவருக்கு கூன்விழுந்த முதுகு. வயது அறுபதுக்கும் மேலிருக்கும். “ரெண்டு கார்டு இருக்கிது. விமலாளுக்க கார்ட மண்ணெண்ண வேண்ட அவ தந்தா.” “எனக்கு இந்த நாலு துண்டுக்கொள்ள சாதனங்கள தூக்கவா முடியும்? மண்ணெண்ணச்சு கன்னாசெங்கு?”...Read more

என்துறை – ஒரு கொண்டாட்டம்

என்துறை கூடுகைக்காக வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 7, 2015) மாலை பென்சில்வேனியா மாகாணத்தின் ஈரி நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருந்த விடுதியில் குடும்பத்துடன் வந்துசேர்ந்தோம். என்துறை கூடுகை ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடக்கின்றது. இது எட்டாவது கூடுகை. என்துறை என்பது கேரளக்கடற்கரையிலிருந்து புலம்பெயர்ந்து அல்லது தற்காலிகமாக வேலைசார்ந்து அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் அமைப்பு. பொதுவாக இதன் அங்கத்தினர்களாக இருப்பது தூத்தூர் Thoothoor பகுதி சார்ந்த மக்கள். தூத்தூர் என்று சொல்லும்போது நீரோடியிலிருந்து இரமன்துறைக்கு இடைப்பட்ட எட்டு...Read more

துறைவன் – ஒரு வாசக அனுபவம்

துறைவனுக்கு நண்பர் காளி பிரசாத் எழுதிய மதிப்புரை. //துறைவன் முழுக்க முழுக்க கடலும், கடல் சார்ந்த மனிதர்களும் கொண்ட ஒரு நெய்தல் நிலத்தின் வாழ்க்கை பதிவு என சொல்லலாம். பரதவன், துறைவன்என பழந்தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் சமுதாயத்தை சார்ந்த முக்குவர் என்றொரு பிரிவினரோடு இரு தலைமுறை காலம் பயணப்படும் நாவல் இது. நாவலை சுவாரசியமாக்குவது அதில் க்றிஸ் தரும் தகவல்கள். கலிங்க யுத்தம்,புனித சவேரியார் வருகை, கத்தோலிக்கம் மற்றும் லண்டன் மிஷனுக்கான...Read more

நேர்காணல்

பதாகை இலக்கிய இதழில் வெளியான என்னுடைய சிறிய பேட்டி. //எனக்கு வரலாற்றின் மீது சிறிது மோகமுண்டு. வரலாற்றில் மீனவர்களை மிகவும் தரக்குறைவாக எழுதியிருப்பதையும், வரலாறுகள் திரிக்கப்பட்டிருப்பதையும் படித்திருக்கின்றேன். காந்தளூர் சாலை குறித்த ஒரு நாவல் படித்தேன். அதில் சோழர்கள் ஒரு தோணியில் பாண்டிய நாட்டிலிருந்து விஜிஞ்சம் வருகின்றார்கள். அவர்கள் கரையில் வந்து பக்கத்து ஊர்களில் தென்னைதோப்புகளில் ஒளிந்துகொள்கின்றார்கள். காலையில் விழிஞ்சம் கோட்டையை சுலபமாக தகர்த்தெறிகின்றார்கள். மீனவர்கள் என்னும் சில ஜந்துக்கள்...Read more

மீன்குருதி படிந்த வரலாறு

துறைவன் நாவலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய முன்னுரையிலிருந்து… //துறைவன் குமரிமாவட்டத்தில் கேரள எல்லையோரமாக அமைந்துள்ள கொல்லங்கோடு கடற்பகுதியில் நடக்கும் கதை. முதல் அத்தியாயம் பர்த்தலோமி கடலுக்குள் செல்வதன் சித்திரத்தை உயிர்ப்புடன் காட்டுகிறது. யானைக்கூட்டங்கள் போல கரையை அறையும் கடல். அதன்மேல் ஏறிச்செல்வது என்பது ஒவ்வொருநாளும் ஒரு வீரசாகசம். தொழில் அல்ல அது, போர். அந்தப்போரில் வீழ்வதும் மீள்வதும் கடலின் கையில் உள்ளது. அந்த முதற்காட்சியில் தான் சொல்லவிருக்கும் வாழ்க்கையின் சாராம்சமான...Read more

அன்னியப்படும் கடற்கரைகள் 1

உலகின் முதல் புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரின்மீது அமெரிக்காவால் போடப்பட்டது. இந்த அணுகுண்டிற்கு தேவையான 6.2கிலோ புளூட்டோனியம் வாசிங்டன் மாகாணத்தின் ஹான்போர்ட் என்னும் நகரிலிருள்ள அணுவுலையிலிருந்து தயாரிக்கப்பட்டது. ஹான்போர்ட் அணுவுலை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும்போது சில அடிப்படைகள் கடைபிடிக்கப்பட்டன. அதில் முக்கியமாக அணுவுலைக்கான இடத்தில் 1000-க்கும் அதிகமான மக்கள் இருக்கக்கூடாது. விவசாயம் நடைபெறாத பகுதியாக இருக்கவேண்டும். அணுவுலை 1000-ற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரத்திலிருந்து குறைந்தபட்சம் 20-மைல்...Read more

கடலாழம்

தைமாசி சீசன். கடலில் அலை அதிகமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் ஆறுபோல் கிடந்தது. இன்று காலை பத்து மணிவரை தாக்குப் பிடிக்கவேண்டும். பத்துமணி என்பது ஒரு நம்பிக்கை. இன்னும் இரண்டு மூன்று மணி நேரம். நான் அவர்கள் மூவரையும் பார்ப்பதையே தவிர்த்திருந்தேன். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. பிளைவுட் எனக்குச்சொந்தமானது. மொத்தம் மூன்று லட்சம் செல்வானது. சுசுகி 9.9 ஹார்ஸ்பவர் வெளிப்பொருத்து என்ஜின். எஞ்சின் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. மீனவர்...Read more