இனயம் துறைமுகம் – 5

பாரத நாடு என்ற வங்காளச்சிறுகதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சொல்வனம் இலக்கிய இதழில் வெளியாகியிருக்கின்றது. அதன் கதைச்சுருக்கம். அண்டா ஹால்ட் என்று ஒரு இரயில் நிலையம். பல இரயில்கள் அந்தவழியாகச்செல்லும். ஆனால் எப்போதாவது ஒரு இரயில் காலையுணவிற்காக அந்த நிலையத்தில் நின்று செல்லும். காலையுணவிற்காக கொடுக்கப்படும் முட்டையின் தோடுகள் அந்த நிலையத்திற்கு பக்கத்தில் மலைபோல் குவிந்து கிடந்ததனால் இரயில் நிலயத்திற்கு அந்த பெயர். இரயில் நிலையத்திற்கு பக்கத்தில் இரண்டு குன்றுகளுக்கு நடுவிலிருந்த கிராமத்தில் மகதோ இன...Read more

கேள்விகளைச் சுமந்தலையும் கடற்பறவை – சிறில் அலெக்ஸ்

அரபிக் கடலில் பின்னோக்கி நீந்திக் கொண்டிருந்த இறால் மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது’ இப்படித் தொடங்குகிறது கிறிஸ்டோபர் ஆன்டணியின் ‘துறைவன்’ நாவல். ஒரு கடற்கரைக் கிராமத்தில் வளர்ந்த என்னைப் போன்ற பலருக்கும் பாடப் புத்தகத்தைத் தவிர்த்த எதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது. ஆனால் இன்று நெய்தல் நிலப் படைப்புகள் நெய்தல் மக்களாலேயே எழுதப்பட்டுத் தீவிர...Read more

இனயம் துறைமுகம் – 4

கடற்கரைகள் உருமாறிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைகளில் ஆனியாடி என்னும் தென்மேற்கு பருவமழை காலகட்டமான மே பாதிமுதல் செப்டம்பர் பாதிவரை அரபிக்கடல் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இதனால் கடலரிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் பலவீடுகள் சேதமாகின்றது. தொடர்ந்து பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. கடலரிப்பு காரணமாக கடல் அதன் எல்லையை மாற்றியமைக்கின்றது. கடற்கரை ஊர்கள் சுருங்குகின்றன.  பல ஊர்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கின்றன. கடலரிப்பும் மணலேற்றமும் உலகளாவிய பிரச்சனை. கடலரிப்பு கடற்கரை மக்களின் வாழ்வாதாரத்தை...Read more