இனயம் துறைமுகம் – 8

*கனவு மெய்ப்படுமா?*   இனயம் துறைமுக திட்டம் என்றால் என்ன? இந்தியாவிலிருக்கும் அதானியின் அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை, அதானியால் ஒப்பந்தமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து, அதானியின் நிலக்கரி சுரங்க நிறுவனத்தினால் வெட்டியெடுக்கப்பட்டு, அதானியின் கப்பல் நிறுவனத்தினால் இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான துறைமுகத்தை, அதானியின் துறைமுக நிறுவனத்தால், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, இனயம் கடற்கரை கிராமத்தில் கட்டப்படவிருக்கும் திட்டமே இனயம் துறைமுக திட்டம் என்று மிகச் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. இனயம் துறைமுகத் திட்டத்தின் ஆன்மா ஆஸ்திரேலியாவின்...Read more

இனயம் துறைமுகம் – 7

* வெட்ஜ் பேங்க் * கடலில் பவளப்பாறை திட்டுகளில் மீன்கள் அடர்த்தியாக ஒரே இடத்தில் பல்லாயிரம் டன் அளவிற்கு பெருத்து வளரும். அந்த பவளப்பாறையை மீனவர்கள் கண்டுபிடிக்காத வரை அந்த திட்டுகளில் மீன்கள் பிறந்து, வளர்ந்து, செத்து, மட்கி, சிறுமீனிற்கு உணவாகும். இதுபோன்ற திட்டுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு முதல் முறை துண்டிலிடும்போது மீன்களின் அடர்த்தி காரணமாக துண்டில் கீழிறங்காது. அந்தளவிற்கு மீன் செறிவாக இருக்கும். பளப்பாறைகளைப்போல், சிறிய பாறைகள், உடைந்து மூழ்கிய கப்பல் போன்றவற்றிலும் அதிக அளவு மீன்கள்...Read more