துறைவன் – சில சில்லறைகள்

[சமீபத்தில் துறைவன் குறித்து நண்பர்களால் எழுப்பப்பட்ட சில விமர்சங்களுக்கான பதில்கள் இவை.] கேள்வி: துறைவன் நாவல் பொய்ப்பிரச்சாரம் செய்வதாகச் சொல்கிறார்களே?  பதில்: துறைவன் ஒரு நாவல். அதிலிருக்கும் வரலாற்று தகவல்கள் நாவல் கதாபாத்திரங்களின் விவாதப்பொருளாகவே இருக்கிறது. ஒரு கட்டுரையைப்போல் வெளிப்படையான தெளிவான தரவுகளை ஒரு நாவலில் எதிர்பார்க்க முடியாது. ஒரு நாவலில் வாசக இடைவெளி வேண்டுமென்பதால், துறைவனில் சில தகவல்கள் வெளிப்படையாக இல்லாமலிருக்கும். முக்குவர்கள் என்னும் “இனக்குழுவின் பெயர்” போர்ச்சுக்கீசியர்களின்...Read more

முக்காரு யுத்த கதா

-1- இலங்கையின் சிங்கள அரசர் ஆறாம் பராக்கிரமபாகு, காஞ்சிபுரம், கீழக்கரை மற்றும்  காவேரிப்பட்டினம் கரையர் படைகளின் உதவியுடன் புத்தளத்தில் முகாமிட்டிருந்த  முக்காரு படையை தோற்கடித்ததை விவரிக்கும் முக்காரு யுத்த கதா என்னும் ஓலைச்சுவடி பிரிட்டானிய அருங்காட்சியகத்தில் (எண். Or. 6606) பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டெடுத்தவர் ஹூ நெவில் என்னும் பிரிட்டானியர். இலங்கையின் வரலாற்றையும், இனங்களையும் விரிவாக ஆய்வுசெய்து பதிவுசெய்தவர் இவர். பின்வருவது ஹூ நெவில் அவர்களின் முக்காரு யுத்த கதா...Read more

படகோட்டிகள்

எதிர் வெளியீடாக வந்திருக்கும் இனயம் துறைமுகம் புத்தகத்தின் படகோட்டிகள் கட்டுரையின் ஒருபகுதி. புத்தம் வாங்க: http://www.ethirveliyedu.in/shop/இனயம்-துறைமுகம்/ -1- 15ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக வெளிநாடுகளை கைப்பற்றுவதில்  போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் தீவிரம் காட்டின. அப்போது இந்த இரண்டு நாடுகள் மட்டுமே கடலில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. 1498-ம் வருடம் போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோ ட காமா கடல்வழிப்பயணமாக இந்தியாவின் கோழிக்கோட்டில் கால்பதித்தார். 1588ம் வருடம் இங்கிலாந்து ஸ்பெயின் கடற்படையை தோற்கடித்த...Read more

துறைவன் – மார்ஷல் சில்வா

சின்னத்துறை திரு. மார்ஷர் A. சில்வா (2016 வருட இந்திய குடியுரிமை பணிகளுக்கான தேர்வு, தரவரிசை 820) துறைவன் குறித்து எழுதியது. Marshall [31-05-2016@20.46.08(IST)] Congratulations Sir for the prestigious award and also for your immense contribution to pen down a historic account of our land and its people. Thuraivan is a novel which I consider as a...Read more

இனயம் துறைமுகம் – ஒரு தகவல்பிழை

இனயம் துறைமுகம்  புத்தகத்திலிருக்கும் ஒரு தகவல்பிழையை நண்பர் N.D. தினகர் சுட்டிக்காட்டியுள்ளார். “உங்களது இனயம் துறைமுகம் புத்தகத்தை பார்த்தேன். பக்கம் 125 ல் தவறான தகவல் இருந்ததாலயே இந்த பதிவு. திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1948 ல் நடைபெற்ற தேர்தலில் மட்டுமே மீனவருக்கு தனித் தொகுதி தரப்பட்டிருந்தது. அகஸ்தீஸ்வரம் ( கத்தோலிக்கர்) என்பதே அந்த தொகுதியின் பெயர். இதில் பரதவர் சாதியைச் சேர்ந்த அம்புரோஸ் வெற்றிபெற்றார். 1949 ல் திரு-கொச்சி மாநிலம்...Read more