கடலோர கூட்டுகுடிநீர் திட்டம்

தென்மேற்கு கடற்கரை கிராமங்களில் தண்ணீர் தேவை தலையாய பிரச்சனையாக இருக்கின்றது. எங்கள் ஊரில் அரைப்படி கிணறுகள் உண்டு. நின்றுகொண்டு கயிறு எதுவும் கட்டாமல் வாளியால் தண்ணீரை கோரி இறைக்கலாம். ஆனால், இப்போது ஜனத்தொகை அதிகரித்தபிறகு பொதுக்கிணறுகள் என்று எதுவுமில்லை. அதைவிட, இப்போது கிணற்று நீர் உப்பாகிவிட்டிருக்கின்றது. கடற்கரைகளில் அளவுக்கதிகமாக கனிம மணலை தோண்டி எடுப்பதால் பலகிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக்கிவிட்டது.(1) அதுபோது, சுனாமிக்குப்பிறகு தமிழக கடற்கரையில் 500 மீட்டர் வரை ...Read more

மரிய லூர்தம்மாள் சைமன்

*மரிய லூர்தம்மாள் சைமன்* முன்னாள் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய லூர்தம்மாள் சைமன் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என்னும் வேண்டுகோளை நண்பர் குறும்பனை பெர்லின் தொடர்ந்து அரசிற்கு வைக்கின்றார். அந்த கோரிக்கை என்னவானது என்பதை “மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு – குப்பையில் போன கோப்புகள்” என்னும் புத்தகம் வழியாக ஆவணப்படுத்தியுள்ளார். லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிலைவைக்கவேண்டும், அவர் பிறந்த ஊரான மணக்குடி கிராமத்திலிருக்கும்...Read more

சார்கள்

சார்கள் (சிறுகதை) * “திலீபு, இனியும் எனக்கு நடக்க முடியாலும்” மூச்சிரைக்க ஒவ்வொரு வார்த்தையாக பர்னாந்து சொன்னார்.  “ஒரு இன்கம் சர்ட்டிபிகேட் வாங்க இத்ற கஷ்டமா? அவன் அவனுக்க தோனியாசமும் காட்டிண்டு காலேஜுக்கு போயாச்சு. நான் கெடந்து சாவணும்” பர்னாந்திற்கு மூச்சு முட்டியது. நடக்க முடியவில்லை. “கொறச்சு நேரம் இதில இரியுமி.” குழித்துறை கோர்ட்டிலிருந்து இடைவழியாக பஸ்டாப்புக்கு வரும் வழியிலிருந்த வயலோர தென்னைமர நிழலில் உடகார்ந்தார்கள். ஒவ்வொரு இருமலுக்கும் கபம்...Read more