406 மெகா ஹெர்ட்ஸ்

2009ம் வருடம் நவம்பர் மாதம் குஜராத் மற்றும் மஹாராஷ்ரா கடற்கரையை பியான் புயல் தாக்கியது. இதில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தூத்தூர் பகுதி மீனவர்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்த புயலில் சிக்கி சின்னத்துறை கிராமத்தைச் சார்ந்த ஒன்பது மீனவர்கள் இறந்தார்கள். தூத்தூர் பகுதி மீனவர்கள் அதுவரை எதிர்கொண்ட மிகப்பெரிய சூறாவளிப் புயல் பியான் மட்டுமே. எப்போதும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரையில் தொடர்பு கொள்வதாற்கான தொழில்நுட்பம் இருந்ததில்லை. நம்முடைய மத்திய மாநில...Read more

டெக்னோபோபியா

-1- ஒவ்வொரு நாடும் நவீன தொழில்நுட்பங்களை நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் நலனுக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, இந்தியா மட்டும் விதிவிலக்காக நவீன தொழில்நுட்பங்களை நாட்டின் பாதுகாப்பிற்கு கேடுவிளைவிக்குமென்று கருதி தடைசெய்திருப்பது கேவலமானது, முட்டாள்தனமானது. அதாவது, கணினியில் ஹேக்கர்கள் ஊடுருவுவார்கள் என்பதால் நாட்டில் கணினியே பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதைப்போன்றது இது. எவ்வளவு வெட்கக்கேடானது? ஆங்கிலத்தில் டெக்னோபோபியா (Technophobia) என்று ஒரு வார்த்தை இருக்கின்றது. இதன் பொருள் நவீன தொழில் நுட்பங்களைக் கண்ட பயம். இந்தியாவிற்கு...Read more

ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 5

ஒரு இயற்கைப் பேரிடரை தேசியப்பேரிடராக அறிவிப்பதற்கு எந்தவித வரைமுறைகளும் இல்லை. அந்தந்த பேரிடர்களினால் ஏற்படும் பேரழிவு, அதன் தீவிரம், அந்த பேரழிவை சமாளிப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் திறன் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பேரிடரை தேசியப் பேரிடாராக அறிவிக்கமுடியுமென்று உள்துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை இந்திய விவசாத்துறையின் கீழ் இயங்குகின்றது.  கால்நடைகளுக்கான தேசிய பேரிடர் மேலாண்மை திட்டதை தேசிய...Read more

ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் – 4

ஒக்ஹி – ஒரு தேசியப் பேரிடர் – 4 ஒக்கி புயலால் ஏற்பட்ட பேரிடருக்கு இந்திய வானிலை ஆய்வு மையமும் அதன் செயல்பாடுகளுமே மூலகாரணம். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் தொடர்ந்து தவறானதாகவே இருக்கின்றது. ஒக்கி புயல் மட்டுமல்ல, கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் பெருமழை ஏற்படுத்திய பாதிப்புகளும், ஐம்பதிற்கும் அதிகமான உயிரிழப்புகளும் இந்திய வானிலை மையம் மும்பையின் பெருமழையை கணிக்கத்தவறியதே காரணமாகச் சொல்லப்படுகின்றது. வானிலையை சரியாக கணிக்கத்...Read more

முக்காரு யுத்த கதா

-1- இலங்கையின் சிங்கள அரசர் ஆறாம் பராக்கிரமபாகு, காஞ்சிபுரம், கீழக்கரை மற்றும்  காவேரிப்பட்டினம் கரையர் படைகளின் உதவியுடன் புத்தளத்தில் முகாமிட்டிருந்த  முக்காரு படையை தோற்கடித்ததை விவரிக்கும் முக்காரு யுத்த கதா என்னும் ஓலைச்சுவடி பிரிட்டானிய அருங்காட்சியகத்தில் (எண். Or. 6606) பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டெடுத்தவர் ஹூ நெவில் என்னும் பிரிட்டானியர். இலங்கையின் வரலாற்றையும், இனங்களையும் விரிவாக ஆய்வுசெய்து பதிவுசெய்தவர் இவர். பின்வருவது ஹூ நெவில் அவர்களின் முக்காரு யுத்த கதா...Read more

படகோட்டிகள்

எதிர் வெளியீடாக வந்திருக்கும் இனயம் துறைமுகம் புத்தகத்தின் படகோட்டிகள் கட்டுரையின் ஒருபகுதி. புத்தம் வாங்க: http://www.ethirveliyedu.in/shop/இனயம்-துறைமுகம்/ -1- 15ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக வெளிநாடுகளை கைப்பற்றுவதில்  போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் தீவிரம் காட்டின. அப்போது இந்த இரண்டு நாடுகள் மட்டுமே கடலில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. 1498-ம் வருடம் போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோ ட காமா கடல்வழிப்பயணமாக இந்தியாவின் கோழிக்கோட்டில் கால்பதித்தார். 1588ம் வருடம் இங்கிலாந்து ஸ்பெயின் கடற்படையை தோற்கடித்த...Read more

கடலில் கரையும் குமரி கடற்கரை

[குறும்பனை சி. பெர்லினின் ‘கடலில் கரையும் குமரி கடற்கரை’ என்னும் கட்டுரை புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை] தமிழகத்தின் தென்மேற்கு கடற்கரையில் கடலரிப்பிற்கு இரையாகாத கிராமங்கள் இருப்பது அபூர்வம். ஒவ்வொரு வருடமும், ஆனி ஆடி காலகட்டத்தில், கடல்சீற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடல் நீரோட்டத்தின் வீரியம் எந்தவித ஆய்வு வரைமுறைகளுக்கும் உட்படுத்த முடியாமலிருக்கிறது. தமிழக எல்லையோரத்திலிருக்கும் கேரளாவின் விழிஞ்சம் பன்னாட்டுத் துறைமுக கட்டுமானத்திற்கு கடலுக்குள் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அலைதடுப்புச்சுவர் கட்டும்வேலைகள் துரிதமாக...Read more

சேலுகேடு

[குறும்பனை சி. பெர்லின் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் சேலுகேடு குறுநாவலுக்கு என்னுடைய அணிந்துரை] ஒரு சமூகத்தின் சாதனை என்பது, அது தன்னிடமிருந்து எத்தனை எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்தது. எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை, இலக்கியவாதிகளை உருவாக்காத எந்த சமூகத்திற்கும் எதிர்காலமில்லை. எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் குரல். அந்த சமூகத்தின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக முன்வைப்பவர்கள். சமூகத்தின் ஒட்டுமொத்த வலியையும் தன்னுள் உணர்ந்து எழுத்தாக்குபவர்கள். எழுத்தாளனின் மனம், தான்சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த...Read more

இனயம் துறைமுகம்

[எதிர் வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய ‘இனயம் துறைமுகம்’ என்னும் கட்டுரை நூலுக்கு எழுதிய முன்னுரை.] கடந்த காலங்களை விட தற்போது கடலரிப்பு காரணமாக  கடற்கரைகள்  வெகுவிரைவாகச் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. மீனவர்கள் கடற்கரைகளிலிருந்து அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த கடற்கரையில் 60% கடற்கரைகள் கடலரிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றது. கடந்த  பதினைந்து   வருடங்களில் 250 சதுர கிலோமீட்டர் அளவிற்கு இந்திய கடற்கரைகளை கடல்கொண்டிருக்கின்றது. இதற்கு கடற்கரை சார்ந்த கட்டுமானங்களும் பருவ நிலை மாற்றம் காரணமாக...Read more

எனது நல்லாசிரியர்கள்

[மார்த்தாண்டன்துறை புனித ஆலோசியஸ் மேல்நிலைப்ப்பள்ளி நூற்றாண்டுவிழா மலரில் வெளியான என்னுடைய கட்டுரை]   “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” – மகாகவி. பாரதியார் ஒரு பள்ளியின் வயது, அந்த பகுதியின் குறைந்தபட்ச நவீன கல்வியறிவின் வயது என்றுகூடச் சொல்லலாம். இந்தியாவில் ஒரு பள்ளி தன் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவது...Read more