இனயம் துறைமுகம் – 3

அதானி குழுமம் குஜராத்தில் பல துறைமுகங்களை நிர்வகிக்கின்றது. இவற்றில் முக்கியமானது ஹஜிரா துறைமுகம். சில மாதங்களுக்கு முன்பு “ஹஜிரா மச்சிமார் சமிதி” என்னும் மீனவர் அமைப்பு ஹஜிரா துறைமுகத்தினால் 300 மீனவ குடும்பங்கள் இடம்பெயந்ததாகவும் மீன்பிடி தொழிலை செய்ய முடியாமல் தங்களின் பாரம்பரிய மீன்பிடித்தொழில் பாதிப்படைவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2016 ஜனவரி 28 நாள் விசாரணைக்கு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதானி குழுமத்திற்கு ஆஜரானார். முடிவில் தேசிய...Read more

அன்னியப்படும் கடற்கரைகள் – 2

வரும் மார்ச் பதினொன்றாம் நாள் ஜப்பானின் ஃபுகுஷிமா அணுவுலையின்  ஐந்தாவது நினைவுதினம். ஃபுகுஷிமா அணுவுலை தன் கல்லறைத்தோட்டத்தில் கதிர்வீச்சை பரப்பிக்கொண்டு உருகிக்கிடக்கின்றது. ஃகுஷிமாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த பூகம்பத்தினால் ஏழு மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் உருவாகி ஃபுகுஷிமா அணுவுலையை தாக்கியதில் அந்த அணுவுலை வெடித்து அதிலிருந்து ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சினால் இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து இப்போது ஃபுகுஷிமா அணுவுலையைச் சுற்றிலும் 25 கிலோமிட்டர் சுற்றளவிற்கு மக்கள் நடமாட்டமில்லாத...Read more

இனயம் துறைமுகம் – 1

சில அரசியல் தலைவர்கள் கட்சி, ஜாதி, மதம் கடந்து அனைவருக்கும் பொதுவானவராக, எளிய மக்களில் ஒருவராக இருப்பார்கள். கன்னியாகுமரியைப் பொறுத்தவரை அவ்வாறு பல நேர்மையான அரசியல் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள். தற்போது கம்மூனிஸ்டு கட்சியில் திருமதி லீமாரோஸ், பிஜேபியில் பொன்னர் என்னும் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள். இதில் பலருக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கடற்கரை மக்கள் ஏதேனும் உதவிக்கு சென்றாலும் அவரால் முடிந்ததை அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செய்திருக்கின்றார். ஆனாலும் சிலநேரம்...Read more

இனயம் துறைமுகம் – 2

இந்தியாவின் மேற்கு கடற்கரையின் ஆழம் அதன் கடல்வெட்டிலிருந்தே துவங்குகின்றது. அதுபோல் பொழிமுகங்களும் அரபிக்கடல் கடற்கரைகளில் அதிகம். இவையே இந்த பகுதிகளில் இயற்கை துறைமுகங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணிகள். இதற்கு விதிவிலக்கு விழிஞ்சம் மற்றும் குளச்சல் துறைமுகங்கள். கடலரிப்பு காரணமாக கடலினுள் சென்ற பாறைகள் இயற்கையான தடுப்பரண்கள்போல் கடற்கரைகளை பாதுகாக்கின்றது. இந்த பாறைகளும், கடல் ஆழமும் விழிஞ்சம் மற்றும் குளச்சலில் இயற்கை துறைமுக உருவாகத்தில் முக்கிய பங்குவகிக்கின்றன. கரைகளில் மட்டுமல்ல கடலிலும்...Read more

எரியும் பனிக்கட்டி

[மீத்தேன் பிரச்சனை துவங்குவதற்கு முன்பு 2012 எழுதிய ஒரு எளிய கட்டுரை] ஒருபக்கம் இலங்கை கடற்படை, மறுபக்கம் அணுவுலை அது போக ஆழ்கடல் மீன்பிடிப்பு உரிமையை பன்னாட்டு மீன்பிடி கம்பனிகளுக்கும் தாரை வார்த்து இந்திய மீனவனில் சங்கை நெரித்து குப்புறத் தள்ளியாகி விட்டது. இன்னும் என்ன என்று யோசித்த போது இது சிக்கியது. எரியும் பனிக்கட்டி! புவியின் வெப்பத்தை சமன் செய்வதில் புவி வளிமண்டலத்திலிருக்கும் பசுமைக்குடில் வாயுக்களான மீத்தேன், கார்பன்-டை-ஆக்ஸைட்...Read more

என்துறை – ஒரு கொண்டாட்டம்

என்துறை கூடுகைக்காக வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 7, 2015) மாலை பென்சில்வேனியா மாகாணத்தின் ஈரி நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருந்த விடுதியில் குடும்பத்துடன் வந்துசேர்ந்தோம். என்துறை கூடுகை ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடக்கின்றது. இது எட்டாவது கூடுகை. என்துறை என்பது கேரளக்கடற்கரையிலிருந்து புலம்பெயர்ந்து அல்லது தற்காலிகமாக வேலைசார்ந்து அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் அமைப்பு. பொதுவாக இதன் அங்கத்தினர்களாக இருப்பது தூத்தூர் Thoothoor பகுதி சார்ந்த மக்கள். தூத்தூர் என்று சொல்லும்போது நீரோடியிலிருந்து இரமன்துறைக்கு இடைப்பட்ட எட்டு...Read more

அன்னியப்படும் கடற்கரைகள் 1

உலகின் முதல் புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரின்மீது அமெரிக்காவால் போடப்பட்டது. இந்த அணுகுண்டிற்கு தேவையான 6.2கிலோ புளூட்டோனியம் வாசிங்டன் மாகாணத்தின் ஹான்போர்ட் என்னும் நகரிலிருள்ள அணுவுலையிலிருந்து தயாரிக்கப்பட்டது. ஹான்போர்ட் அணுவுலை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும்போது சில அடிப்படைகள் கடைபிடிக்கப்பட்டன. அதில் முக்கியமாக அணுவுலைக்கான இடத்தில் 1000-க்கும் அதிகமான மக்கள் இருக்கக்கூடாது. விவசாயம் நடைபெறாத பகுதியாக இருக்கவேண்டும். அணுவுலை 1000-ற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரத்திலிருந்து குறைந்தபட்சம் 20-மைல்...Read more