சார்கள்

சார்கள் (சிறுகதை) * “திலீபு, இனியும் எனக்கு நடக்க முடியாலும்” மூச்சிரைக்க ஒவ்வொரு வார்த்தையாக பர்னாந்து சொன்னார்.  “ஒரு இன்கம் சர்ட்டிபிகேட் வாங்க இத்ற கஷ்டமா? அவன் அவனுக்க தோனியாசமும் காட்டிண்டு காலேஜுக்கு போயாச்சு. நான் கெடந்து சாவணும்” பர்னாந்திற்கு மூச்சு முட்டியது. நடக்க முடியவில்லை. “கொறச்சு நேரம் இதில இரியுமி.” குழித்துறை கோர்ட்டிலிருந்து இடைவழியாக பஸ்டாப்புக்கு வரும் வழியிலிருந்த வயலோர தென்னைமர நிழலில் உடகார்ந்தார்கள். ஒவ்வொரு இருமலுக்கும் கபம்...Read more

திலேப்பியா

இடைப்பாடு கிராமத்தில் கடற்காற்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசிக்கொண்டிருந்தது. கடலிருக்குமிடம் தெற்கு! சூரியன் உச்சியில் நிலைத்து மெதுவான அதிர்வுகளோடு தெற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கடலில்குளித்து கரையேறிய சிறுவர்கள் சுடுமணலில் உட்கார்ந்து தொடையிடுக்கில் சுடுமணலை வாரிவாரி வைத்து புதைந்தார்கள். கட்டுமரங்கள் மெதுவாக ஆழ்கடலிலிருந்து கரைநோக்கி உடைந்து சிதறிய கண்ணாடிச் சில்லுகளின்மேல் சேதாரமின்றி வழுவி வந்துகொண்டிருந்தது. சில வள்ளங்களை தலை நிமிர்ந்து மீனவர்கள் கடலில் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஒருசிறுவன் மயக்கம் தெளிந்து, “லேய், ராயூ வருதாம் பாரு”, என்று...Read more

கண்டாலறியும்புள்ளி

“சித்தியே, இந்த உச்ச வெயிலிலி எங்கு போறீ? ரேசங்கடயிலயா?” வீட்டுத்திண்ணையில் எட்டிப்பார்த்து எலிசபெத் கேட்டார். “ஆ, உனக்க துண்டு இருக்கேது?” கிளாரா கண்களை கூர்ந்து பார்த்து கேட்டார். இடைப்பாடு கிராமத்தில் எப்போதும் வெயில் சற்று அதிகம்தான். அவருக்கு கூன்விழுந்த முதுகு. வயது அறுபதுக்கும் மேலிருக்கும். “ரெண்டு கார்டு இருக்கிது. விமலாளுக்க கார்ட மண்ணெண்ண வேண்ட அவ தந்தா.” “எனக்கு இந்த நாலு துண்டுக்கொள்ள சாதனங்கள தூக்கவா முடியும்? மண்ணெண்ணச்சு கன்னாசெங்கு?”...Read more

கடலாழம்

தைமாசி சீசன். கடலில் அலை அதிகமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் ஆறுபோல் கிடந்தது. இன்று காலை பத்து மணிவரை தாக்குப் பிடிக்கவேண்டும். பத்துமணி என்பது ஒரு நம்பிக்கை. இன்னும் இரண்டு மூன்று மணி நேரம். நான் அவர்கள் மூவரையும் பார்ப்பதையே தவிர்த்திருந்தேன். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. பிளைவுட் எனக்குச்சொந்தமானது. மொத்தம் மூன்று லட்சம் செல்வானது. சுசுகி 9.9 ஹார்ஸ்பவர் வெளிப்பொருத்து என்ஜின். எஞ்சின் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. மீனவர்...Read more