துறைவன் – மார்ஷல் சில்வா

சின்னத்துறை திரு. மார்ஷர் A. சில்வா (2016 வருட இந்திய குடியுரிமை பணிகளுக்கான தேர்வு, தரவரிசை 820) துறைவன் குறித்து எழுதியது. Marshall [31-05-2016@20.46.08(IST)] Congratulations Sir for the prestigious award and also for your immense contribution to pen down a historic account of our land and its people. Thuraivan is a novel which I consider as a...Read more

கேள்விகளைச் சுமந்தலையும் கடற்பறவை – சிறில் அலெக்ஸ்

அரபிக் கடலில் பின்னோக்கி நீந்திக் கொண்டிருந்த இறால் மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது’ இப்படித் தொடங்குகிறது கிறிஸ்டோபர் ஆன்டணியின் ‘துறைவன்’ நாவல். ஒரு கடற்கரைக் கிராமத்தில் வளர்ந்த என்னைப் போன்ற பலருக்கும் பாடப் புத்தகத்தைத் தவிர்த்த எதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது. ஆனால் இன்று நெய்தல் நிலப் படைப்புகள் நெய்தல் மக்களாலேயே எழுதப்பட்டுத் தீவிர...Read more

சுஜாதா விருது புனித சவேரியாருக்கு சமர்ப்பணம்

எழுத்துலகில் எனக்கும் துறைவனுக்கும் கிடைத்திருக்கும் என் முதல் இலக்கிய விருதான உயிர்மையின் சுஜாதா விருதை மீனவர்களின் ஞானத்தந்தை புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு சமர்ப்பிக்கின்றேன். புனித சவேரியாரின் கருணை எழுத்துலகிலும் தனிவாழ்க்கையிலும் என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்தட்டும்.Read more

துறைவனுக்கு சுஜாதா விருது

உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைத்து வழங்கும் 2016-ம் ஆண்டிற்கான சுஜாதா விருதிற்கு துறைவன் நாவல் தேர்வாகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளைக்கும்,  தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் என் நன்றி!Read more

துறைவன் விமர்சனம் – சுந்தர் கார்த்திகேயன்

துறைவனை வெளி-நிலத்திற்கும் கொண்டுவந்த உங்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! சாதாரணமாக என் உள்ளுணர்வினால் மட்டுமே நான் புத்தகங்களை தேர்வு செய்கிறேன்! 2015-ன் கடைசியில் 27-ம் தேதி டிசம்பர், விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிற்கு வந்த எனக்கு உங்கள்துறைவன் நூல் வெளியீட்டை அறிவதற்கும், வாங்குவதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது! 9-ம் தேதி ஜனவரி படித்து முடித்தபோது இவ்வருட தொடக்கத்திலேயே நான் ஒரு நல்ல பதிவை படித்தஅதிருஷ்டக்காரன் ஆனேன் என்றுதான் சொல்லவேண்டும்! 45தினங்கள்...Read more

துறைவன் ஒரு நேர்மையான விமர்சனம்

திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் துறைவனுக்கு எழுதிய மிக நேர்மையான விமர்சனம். இவர் ஒரு நெய்தல் படைப்பாளி என்பதால் நான் இந்த விமர்சனத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றேன். மிகவும் விரிவாக அலசியிருக்கின்றார். நன்றி! பொதுவாக இலக்கிய ஆக்கங்களுக்கு வரும் விமர்சனத்திற்கு பதில் கொடுக்கவேண்டிய தேவையில்லாதிருப்பினும், எழுதுகின்றவர்களின் தகுதி, அவர்கள் இதற்காக செலவழித்த நேரம், விமர்சனத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, இலக்கிய ஆக்கங்களில் வாசக இடைவெளி இருப்பினும், அந்த விமர்சனங்கள்...Read more

கடலின் நியதி – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

தமிழ் இலக்கியத்தின் நட்சத்திர எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் துறைவனுக்கு எழுதிய விரிவான விமர்சனம். // கடல் பற்றித் தமிழில் ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கடற்புரத்து வாழ்க்கையைப் பற்றிய சிறுகதைகளும் நாவல்களும் மிகக்குறைவு. தோப்பில் முகமது மீரான், ஜோ டி குரூஸ் இருவரும் மீனவர்களின் வாழ்வியல் குறித்துச் சிறந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள். வறீதையா கன்ஸ்தண்டீன் கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து...Read more

துறைவன்: முக்குவர் வாழ்வும் வரலாறும்

[நண்பர் வேணு தயாநிதி சொல்வனம் இலக்கிய இதழில் எழுதிய கட்டுரை.] //அலை தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. அலைகள் என்பவை கறுத்த யானைகள். கடலுக்குள் நடக்கும் யானைச்சண்டையில் வென்ற யானைகள் தோல்வியுற்ற யானைகளைக் கடற்கரை நோக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது. யானைகளின் குருதி வெள்ளை நிற நுரையாகக் கடற்கரையெங்கும் பரவிக்கிடக்கிறது.// //அலை விழும் இடத்திலிருந்து கடல் விளிம்பு வரையுள்ள கடல்நீர் பேரருவி விழுந்து உருவாகும் வெண்பரப்பு சிறுமியின் கருநீல பட்டுப்பாவாடையின் வெள்ளை...Read more

துறைவன் – என்னுரை

இந்தியாவின் வரலாறு அதன் இனக்குழுக்களின் வரலாறுகள் இல்லாமல் முழுமையடையாது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் முக்குவர்கள் என்பவர்கள் மிகப்பெரிய இனம். இவர்களின் வரலாறாக தற்போது கிடைப்பவை அனைத்தும் போர்சுகீசியர்களின் வருகைக்குப்பிந்திய இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கின்றது. பதினாறாம் நூற்றாட்டுக்கு முந்தைய முக்குவா இனமக்களின் வரலாறு தெளிவாக இன்னும் ஆராயப்படாமலிருக்கின்றது. “வரலாறென்பது உண்மைக்கும் தொன்மத்திற்கும் பிறந்த புதல்வி” என்று நிகாஸ் கசந்த்சாகீஸ் சொல்வார். ஆனால் நமக்கு இப்போது  கிடைக்கும் வரலாறுகளும், அதுபோல் இன்று எழுதப்படும் வரலாறுகளும் இன மேட்டிமையுடன் ஒரு பக்க...Read more