நேதாஜி விருது

*நேதாஜி விருது* தூத்தூர் பகுதியின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக  நேதாஜி விருதை ‘தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு’ புதிதாக அறிவித்திருக்கின்றது. மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு தொடர்ந்து எழுதுவதற்காக நேதாஜி விருதிற்கு என்னை தேர்வு செய்திருக்கின்றார்கள். நேதாஜி விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தேர்வு செய்த தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், தொடந்து எழுத ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நேதாஜி விருத்திற்கான மின்னஞ்சலை  என்னால் நம்ப முடியவில்லை. நண்பரிடம்...Read more

சுஜாதா விருது புனித சவேரியாருக்கு சமர்ப்பணம்

எழுத்துலகில் எனக்கும் துறைவனுக்கும் கிடைத்திருக்கும் என் முதல் இலக்கிய விருதான உயிர்மையின் சுஜாதா விருதை மீனவர்களின் ஞானத்தந்தை புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு சமர்ப்பிக்கின்றேன். புனித சவேரியாரின் கருணை எழுத்துலகிலும் தனிவாழ்க்கையிலும் என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்தட்டும்.Read more

துறைவனுக்கு சுஜாதா விருது

உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைத்து வழங்கும் 2016-ம் ஆண்டிற்கான சுஜாதா விருதிற்கு துறைவன் நாவல் தேர்வாகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளைக்கும்,  தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் என் நன்றி!Read more