கணவாய் மீன்கள்

மத்திய கடல்வள ஆய்வு நிறுவனம் (Central Marine Fisheries Research Institute) சமீபத்தில் கடலில் செயற்கையான வெளிச்சத்தைக்கொண்டு மீன்பிடிப்பது குறித்து ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கின்றது. இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பில், 13°N/71°E, 11°N/72°E and 10°N/71°E  பகுதிகளில், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 4.2 முதல் 92.8 டன் என்ற விகிதத்தில் மொத்தம் 25.2 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. அதுபோல், வருடத்திற்கு 6.3 லட்சம் டன் கணவாய்மீன்களை...Read more

தேர்தல் வாக்குறுதிகள்

ஒவ்வொரு தேர்தலிலும் மீனவர்களுக்கு பலதரப்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் அதில் எவையும் நிறைவேற்றப்படுவதில்லை என்று துணிந்து சொல்லலாம். குறைந்த பட்சம் கடலரிப்பினால் உடைந்த சாலைகள் கடந்த எட்டு வருடங்களாக இன்னும் சீர்செய்யப்படாமல் கிடக்கின்றது. பாராமுகம் காட்டுவதில் கட்சி வேறுபாடில்லை. பொருளியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டு, மீனவர்களின் முக்கியமான அடிப்படை தேவையாக சில நலத்திட்டங்கள் தேவைப்படுகின்றது. என்னுடைய பார்வையில், மீனவர்களின் எதிர்கால நலனுக்கு முக்கியமானதாக எனக்கு தோன்றுவதை பட்டியலிட்டிருக்கின்றேன். இவற்றை நிறைவேற்றும் அரசியல்...Read more

ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர்

2004-ம் வருடம் ஏற்பட்ட சுனாமியைப் போன்ற மோசமான சேதத்தை ஒக்ஹி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டதில் இதுவரை 25பேர் இறந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. உயிர்ச்சேதம் எத்தனை என்று தெளிவாகத்தெரிய பல நாட்கள் ஆகும். ஆழ்கடலில் புயலினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தூத்தூர் பகுதி சார்ந்த சுமார் 250 படகுகளின் துல்லியமான ஜிபிஎஸ் புள்ளிகள் அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2500ற்கும் அதிகமான மீனவர்கள் இருப்பார்கள். இதைவைத்து எளிதாகவே அவர்களை காப்பாற்ற...Read more

துறைவன் – சில சில்லறைகள்

[சமீபத்தில் துறைவன் குறித்து நண்பர்களால் எழுப்பப்பட்ட சில விமர்சங்களுக்கான பதில்கள் இவை.] கேள்வி: துறைவன் நாவல் பொய்ப்பிரச்சாரம் செய்வதாகச் சொல்கிறார்களே?  பதில்: துறைவன் ஒரு நாவல். அதிலிருக்கும் வரலாற்று தகவல்கள் நாவல் கதாபாத்திரங்களின் விவாதப்பொருளாகவே இருக்கிறது. ஒரு கட்டுரையைப்போல் வெளிப்படையான தெளிவான தரவுகளை ஒரு நாவலில் எதிர்பார்க்க முடியாது. ஒரு நாவலில் வாசக இடைவெளி வேண்டுமென்பதால், துறைவனில் சில தகவல்கள் வெளிப்படையாக இல்லாமலிருக்கும். முக்குவர்கள் என்னும் “இனக்குழுவின் பெயர்” போர்ச்சுக்கீசியர்களின்...Read more