இனயம் துறைமுகம் – 7

* வெட்ஜ் பேங்க் * கடலில் பவளப்பாறை திட்டுகளில் மீன்கள் அடர்த்தியாக ஒரே இடத்தில் பல்லாயிரம் டன் அளவிற்கு பெருத்து வளரும். அந்த பவளப்பாறையை மீனவர்கள் கண்டுபிடிக்காத வரை அந்த திட்டுகளில் மீன்கள் பிறந்து, வளர்ந்து, செத்து, மட்கி, சிறுமீனிற்கு உணவாகும். இதுபோன்ற திட்டுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு முதல் முறை துண்டிலிடும்போது மீன்களின் அடர்த்தி காரணமாக துண்டில் கீழிறங்காது. அந்தளவிற்கு மீன் செறிவாக இருக்கும். பளப்பாறைகளைப்போல், சிறிய பாறைகள், உடைந்து மூழ்கிய கப்பல் போன்றவற்றிலும் அதிக அளவு மீன்கள்...Read more

இனயம் துறைமுகம் – 6

உலகின் சயரோகம் **** திறந்த வெளிக் கடலில் (Open Sea) துறைமுகம் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தில் இந்தியா இதுவரை தன்னிறைவு  அடையவில்லை. அதற்கான உண்மையான ஆய்வுகளும் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.  தென்மேற்கு பருவமழை (ஆனியாடி சீசன்) காலகட்டத்தில் இனயத்திற்கு பக்கத்திலிருக்கும் சிறிய மீன்பிடி துறைமுகங்களான முட்டம் மற்றும் தேங்காய்பட்டினம் துறைமுகங்களின் உட்புறம் அலையடிக்கின்றது. இதுதான் இன்றைய நமது ஆய்வு முடிவுகளின் தரம். தென்மேற்கு பருவமழை குறித்த அலெக்ஸ்சாண்டர் ஃரேட்டர் (Alexander Frater) எழுதிய ‘சேசிங் தி மன்சூன்’ (Chasing...Read more

இனயம் துறைமுகம் – 5

பாரத நாடு என்ற வங்காளச்சிறுகதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சொல்வனம் இலக்கிய இதழில் வெளியாகியிருக்கின்றது. அதன் கதைச்சுருக்கம். அண்டா ஹால்ட் என்று ஒரு இரயில் நிலையம். பல இரயில்கள் அந்தவழியாகச்செல்லும். ஆனால் எப்போதாவது ஒரு இரயில் காலையுணவிற்காக அந்த நிலையத்தில் நின்று செல்லும். காலையுணவிற்காக கொடுக்கப்படும் முட்டையின் தோடுகள் அந்த நிலையத்திற்கு பக்கத்தில் மலைபோல் குவிந்து கிடந்ததனால் இரயில் நிலயத்திற்கு அந்த பெயர். இரயில் நிலையத்திற்கு பக்கத்தில் இரண்டு குன்றுகளுக்கு நடுவிலிருந்த கிராமத்தில் மகதோ இன...Read more

கேள்விகளைச் சுமந்தலையும் கடற்பறவை – சிறில் அலெக்ஸ்

அரபிக் கடலில் பின்னோக்கி நீந்திக் கொண்டிருந்த இறால் மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது’ இப்படித் தொடங்குகிறது கிறிஸ்டோபர் ஆன்டணியின் ‘துறைவன்’ நாவல். ஒரு கடற்கரைக் கிராமத்தில் வளர்ந்த என்னைப் போன்ற பலருக்கும் பாடப் புத்தகத்தைத் தவிர்த்த எதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது. ஆனால் இன்று நெய்தல் நிலப் படைப்புகள் நெய்தல் மக்களாலேயே எழுதப்பட்டுத் தீவிர...Read more

இனயம் துறைமுகம் – 4

கடற்கரைகள் உருமாறிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைகளில் ஆனியாடி என்னும் தென்மேற்கு பருவமழை காலகட்டமான மே பாதிமுதல் செப்டம்பர் பாதிவரை அரபிக்கடல் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இதனால் கடலரிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் பலவீடுகள் சேதமாகின்றது. தொடர்ந்து பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. கடலரிப்பு காரணமாக கடல் அதன் எல்லையை மாற்றியமைக்கின்றது. கடற்கரை ஊர்கள் சுருங்குகின்றன.  பல ஊர்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கின்றன. கடலரிப்பும் மணலேற்றமும் உலகளாவிய பிரச்சனை. கடலரிப்பு கடற்கரை மக்களின் வாழ்வாதாரத்தை...Read more

சுஜாதா விருது புனித சவேரியாருக்கு சமர்ப்பணம்

எழுத்துலகில் எனக்கும் துறைவனுக்கும் கிடைத்திருக்கும் என் முதல் இலக்கிய விருதான உயிர்மையின் சுஜாதா விருதை மீனவர்களின் ஞானத்தந்தை புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு சமர்ப்பிக்கின்றேன். புனித சவேரியாரின் கருணை எழுத்துலகிலும் தனிவாழ்க்கையிலும் என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்தட்டும்.Read more

துறைவனுக்கு சுஜாதா விருது

உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைத்து வழங்கும் 2016-ம் ஆண்டிற்கான சுஜாதா விருதிற்கு துறைவன் நாவல் தேர்வாகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளைக்கும்,  தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் என் நன்றி!Read more

துறைவன் விமர்சனம் – சுந்தர் கார்த்திகேயன்

துறைவனை வெளி-நிலத்திற்கும் கொண்டுவந்த உங்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! சாதாரணமாக என் உள்ளுணர்வினால் மட்டுமே நான் புத்தகங்களை தேர்வு செய்கிறேன்! 2015-ன் கடைசியில் 27-ம் தேதி டிசம்பர், விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிற்கு வந்த எனக்கு உங்கள்துறைவன் நூல் வெளியீட்டை அறிவதற்கும், வாங்குவதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது! 9-ம் தேதி ஜனவரி படித்து முடித்தபோது இவ்வருட தொடக்கத்திலேயே நான் ஒரு நல்ல பதிவை படித்தஅதிருஷ்டக்காரன் ஆனேன் என்றுதான் சொல்லவேண்டும்! 45தினங்கள்...Read more

துறைவன் ஒரு நேர்மையான விமர்சனம்

பள்ளம்துறை தொ. சூசைமிக்கேல் அவர்கள் துறைவனுக்கு எழுதிய மிக நேர்மையான விமர்சனம். இவர் ஒரு நெய்தல் படைப்பாளி என்பதால் நான் இந்த விமர்சனத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றேன். மிகவும் விரிவாக அலசியிருக்கின்றார். பொதுவாக இலக்கிய ஆக்கங்களுக்கு வரும் விமர்சனத்திற்கு பதில் கொடுக்கவேண்டிய தேவையில்லாதிருப்பினும், எழுதுகின்றவர்களின் தகுதி, அவர்கள் இதற்காக செலவழித்த நேரம், விமர்சனத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, இலக்கிய ஆக்கங்களில் வாசக இடைவெளி இருப்பினும், அந்த விமர்சனங்கள் புதிய...Read more